"மோடி செய்த மோசடி" பொழந்து கட்டிய கருணாநிதி
நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பிரதமர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 93 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில், தேர்தல் முடிவு நாள் அன்று பிரதமர் நரேந்திர மோடியே காலை 10 மணிக்கு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செல்கிறார் என்றால், தேர்தல் முடிவு எப்படி முன்கூட்டியே தெரிந்தது. இதை வெளிப்படையாக, பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன்.
இதற்கு, டெல்லியில் உள்ள மோடியின் கட்சிக்காரர்கள் விளக்க வேண்டும். அதற்கு முன்பே ஓட்டை எண்ணிப்பார்த்துவிட்டார்களா?. இந்த கேள்விக்கு மாத்திரம் அவர்கள் பதில் சொன்னால் போதும் என பொங்கி எழுந்துள்ளார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment