I am the reason for DMK’s fall in the election | Vaiko

I am the reason for DMK’s fall in the election | Vaiko


திமுக தலைவர் கருணாநிதி இந்தியவிலேயே ஒரு முக்கியமான, மூத்த, வயதான அரசியல் தலைவர். 5 முறை தமிழக முதல்வராக இருந்தவர். அவரை பற்றி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி நாகரிகம் இன்றி பேசியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வர அவரது சக்கர நாற்காலி வந்து செல்லும் அளவுக்கு வசதியான இருக்கை செய்து கொடுக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திமுகவின் கோரிக்கையை ஏற்று அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது, அதில் அவரது சக்கர நாற்காலி வந்து செல்ல முடியும் என அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஒதுக்கிய இருக்கையில் கருணாநிதியின் சக்கர நாற்காலி வந்து செல்ல முடியாது என திமுக தரப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக தலைமைக் கழக பேச்சாளரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான நிர்மலா பெரியசாமி சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். விவாதத்தில் பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தால், அவரது வேட்டியை உருவிவிடவா போகிறோம் என்று அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் பேசினார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மூத்த, வயதான, 5 முறை தமிழக முதல்வராக இருந்த ஒருவரை இது போன்று பேசுவது நாகரிகமில்லை எனவும், கண்டிக்கத்தக்கது எனவும் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

கருணாநிதியின் வேட்டியை உருவிவிடவா போகிறோம்?: நிர்மலா பெரியசாமியின் அநாகரிக பேச்சு



முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி கடும் மோதலை அடுத்து, கருணாநிதிக்கு பாஜக அரசு திகில் காட்டியுள்ளது.

இந்தியா முழுவதும் என்எஸ்ஜி எனப்படும் கமாண்டோ படை பாதுகாப்பு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்தியா முழுமைக்கும் சுமார் 15 அரசியல் தலைவர்களுக்கு இது போன்று வழங்கப்படுகிறது.

இதில், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மற்றும் இரண்டு பேரின் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் அறிந்த கருணாநிதி கடும் கொதிப்பில் உள்ளாராம்.

தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்கு திமுக அதிக அழுத்தம் கொடுப்பத்தன் காரணமாகவே, மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

அங்க அடிச்சா இங்க வலிக்கும் - கருணாநிதிக்கு திகில் காட்டிய பாஜக அரசு



ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவு குறித்து பேசிய போது திமுக உறுப்பினர்கள் பதில் சொல்ல முயன்றதால் அமளி ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்து சட்டசபைக்கு வெளியே சென்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். கச்சத்தீவு குறித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சத்தீவு தொடர்பாக நான் பேசும் போது உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றால், கூச்சல் போடுவதா? கூச்சல் போடுவதால் என்ன ஆகப்போகிறது? உங்கள் தலைவர் பதில் சொல்லட்டும் என கூறினார்.

மேலும், திமுக தலைவர் கருணாநிதி இந்த அவையின் உறுப்பினர். அவர் இங்கே வந்து பதில் சொல்லியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு வெளியே அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த அறிக்கையைப் பற்றித்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களால் முடியவில்லை என்றால் உட்காருங்கள். அறிக்கை கொடுத்தவரே இங்கே வந்து பதில் சொல்லட்டும் என்றார்.

கருணாநிதி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நான் கேட்கின்ற கேள்விகள் கருணாநிதியைப் பார்த்துத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்குப் பதில் சொல்ல தைரியமிருந்தால் திமுக உறுப்பினர்கள் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்ல தைரியமில்லை என்றால், அவர்களுடைய தலைவரை பதில் சொல்வதற்கு இங்கே அழைத்து வரவேண்டும் என ஜெயலலிதா சவால் விடுத்தார்.

தைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ஜெயலலிதா சவால்



சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா திமுகவினருக்கு யார் தலைவர் என்று அவர்களே குழப்பத்தில் உள்ளனர் என கூறினார்.

இன்று முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவு குறித்து பேசியபோது அவையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஜெயலலிதா கச்சத்தீவு தொடர்பாக நான் பேசும் போது பதில் சொல்ல முடியவில்லை என்றால், உங்கள் தலைவர் பதில் சொல்லட்டும். உங்கள் தலைவர், தலைவர்தானா? அல்லது இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர்தான் உங்கள் தலைவரா? என கேள்வி எழுப்பினார்.

நான் கேட்கின்ற கேள்விகள் கருணாநிதியைப் பார்த்துத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்குப் பதில் சொல்ல தைரியம் இருந்தால் அவர்களுடைய தலைவரை இங்கே அழைத்து வரவேண்டும் இங்கே பதில் சொல்வதற்கு.

மேலும் திமுகவினருக்கு தலைவர் யார் என்ற குழப்பம் உள்ளதாக பேசிய ஜெயலலிதா, அவர்களுடைய தலைவர் யார்? திமுகவின் தலைவர் என்று குறிப்பிடுகின்ற கருணாநிதியா? அல்லது இங்கே அமர்ந்திருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவரா? யார் தலைவர் என்பதிலேயே அவர்களுக்கு குழப்பம் என கூறினார்.

யாருப்பா உங்கள் தலைவர் கருணாநிதியா, ஸ்டாலினா?: சட்டசபையில் விளாசிய ஜெயலலிதா



தமிழக சட்டசபையில், திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர். அதிமுக வலையில் திமுக சிக்கிவிட்டதாக அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைமீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்எல்ஏ கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் அமைச்சர்கள் தொடர்ந்து குறுக்கீடு செய்வதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்த வண்ணம் உள்ளனர்.

இதில் ஒரு அரசியல் சூச்சுமம் உள்ளது. அது தெரியாமல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து வெளிநடப்பு செய்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிமுக வலையில் மு.க.ஸ்டாலின்



கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிக்கு, முதல்வர் ஜெயலலிதா 6 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரையில், "1974ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றியும், அதனைத் தடுக்க கருணாநிதி தவறி விட்டது பற்றியும் விரிவாக நான் இந்த மாமன்றத்தில் 20.6.2016 அன்று எடுத்துக் கூறினேன். 21.6.2016 அன்று கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கச்சத்தீவை தாரை வார்க்க தான் எந்த காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை, உடன்பட்டதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு மே மாதம் டெசோ அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நான் கேட்கும் கேள்விகள் என்னவென்றால்,

* 1974ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தவுடன் தான் அது பற்றி தெரியும் என்று சொன்னதும், 15.4.2013 அன்று டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திமுக அரசு வலியுறுத்தி தான் சில ஷரத்துகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன என்று கூறுவதும், ஒன்றுக்கொன்று முரண்பாடானதில்லையா? சில ஷரத்துகள் சேர்க்கும்படி சொல்லப்பட்டது என்றாலே, தாரை வார்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது தானே பொருள்?

* அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சமாதானம் செய்து பல உரிமைகளுக்கு வழி வகுக்கப்பட்டன என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதிலிருந்தே, கச்சத் தீவு தாரை வார்ப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டார் என்று தானே பொருள் ?

* ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய் இது பற்றி வழக்குப் போடப்படும் என்று தெரிவித்தும், தமிழக அரசு ஏன் எந்த வழக்கையும் அப்போது தாக்கல் செய்யவில்லை?

* 2008ம் ஆண்டு தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தாக்கல் செய்து, அதன் பின்னர், 2011ஆம் ஆண்டு, என்னால் சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக அரசும் அதில் தன்னை இணைத்துக் கொண்ட பின், தி.மு.க.வால் அரசியல் காரணங்கள் மற்றும் 2014ம் ஆண்டைய நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தானே 10.5.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது?

* என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பேரில், உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய போது, கருணாநிதியின் தலைமையிலான அப்போதைய தமிழக அரசு ஏன் கச்சத் தீவை தாரை வார்த்தது தவறு என பதில் மனு தாக்கல் செய்யவில்லை?

* அப்போதைய திமுக அரசு வலியுறுத்தியதால் தான் கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை, மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமை, 1974ம் ஆண்டு ஒப்பந்த ஷரத்துகளில் சேர்க்கப்பட்டன என்பது உண்மைக்கு மாறான கருத்தல்லவா?

ஏனெனில், இது போன்ற எந்த ஷரத்தும் 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இல்லையே? இவற்றுக்கெல்லாம் திமுக தலைவர் கருணாநிதி பதில் கூறுவாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் சொல்வாரா கருணாநிதி? அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கிய முதல்வர்



நீண்ட நாட்களாக நீடித்த தேமுதிகவின் உள்ளாட்சி தேர்தல் நிலைப்பாடு இன்று முடிவுக்கு வந்தது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.

தர்மபுரியில் இன்று பேட்டியளித்த தேமுதிக மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் வருகிற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவித்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக, மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து, மிக மோசமான தோல்வியை தழுவியது. அந்த கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான விஜயகந்த் உட்பட போட்டியிட்ட அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர்.

இந்த மோசமான தோல்வியை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தோல்வியடைந்த வேட்பாளர்கள் என அனைவருடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைகளில் அனைவரும் சொன்னது கட்சி மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்ததே தோல்விக்கு காரணம் என்று. இதனையடுத்து தேமுதிக மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகும் என ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.

சில நாட்களாக இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இல்லாமல் உலா வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் நல கூட்டணி தலைவர்கள், தேமுதிக எங்கள் கூட்டணியில் இருந்து விலகினாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பேட்டியளித்தனர்.

இந்நிலையில் இன்று தேமுதிக இந்த அறிவிப்பை வெளியிட்டு மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் எனவும் அறிவித்துள்ளது தேமுதிக.

தேமுதிக தனித்து போட்டி: மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகியது


அனல் கக்கிய ஜெயலலிதாவின் சட்டசபை பேச்சு (வீடியோ இணைப்பு)



சட்ட மன்றத் தேர்தலின் போது சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தோல்விக்கு குழிபறித்த திமுக நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வேட்பாளருக்கு எதிராகப் பணியாற்றிய, சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் வடக்குப் பகுதி 127வது வட்ட துணைச் செயலாளர் எல்.நாகலிங்கம், வட்ட முன்னாள் செயலாளர் பா.குமரன், ஜி.சக்கரை, சி.ராமலிங்கம், 128 வது வட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட பிரதிநிதி ந.மணி ஆகியோர் கட்சியின் உறுப்பினர் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

உள்குத்து நிர்வாகிக்கு வெளிகுத்து குத்திய திமுக தலைமை


சென்னை: கட்சி நிர்வாகிகள் பணம் கேட்டு நச்சரித்தால் கட்சியையே கலைக்கவும் தயங்கமாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து 104 தொகுதியில் போட்டியிட்டது.

ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் தோல்வி குறித்து விஜயகாந்த் தமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

ரூ10 லட்சம் என்னாச்சு? மேலும் தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கப்படும் என்று விஜயகாந்த் கூறியிருந்தாராம். ஆனாலும் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கவில்லையாம்.

சிலருக்கு மட்டும் பணம் தேர்தல் தோல்விக்குப் பிறகும் விஜயகாந்திடம் நிர்வாகிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ய கடந்த 5-ந் தேதி பணம் தரப்படும் எனக் கூறினார். இருந்தபோதும் சிலருக்குத்தான் இந்த பணம் கிடைத்திருக்கிறது.

நான் கடன்காரனா? தற்போது விஜயகாந்த் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலருமே, விஜயகாந்திடம் பணத்தை தாங்க.. ரொம்ப சிரமமாக இருக்கிறது என கெஞ்சியிருக்கின்றனர். ஆனால் விஜயகாந்தோ, என்னங்க கடன்காரர் மாதிரி பணத்தை கேட்கிறீங்க? என எகிறியிருக்கிறார்.

கட்சியை கலைப்பேன்... இந்த கோபத்தின் உச்சத்தில், இப்படியே பணம்...பணம்னு கேட்டுகிட்டே இருந்தீங்க... கட்சியையே கலைச்சுட்டுப் போகவும் நான் தயங்கமாட்டேன்... யாருகிட்ட? என மிரட்டியிருக்கிறார். இதனால் என்னதான் செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி போய் நிற்கிறார்கள் தேமுதிகவினர்.




பணம்.. பணம்னு கேட்டுகிட்டே இருந்தீங்க... கட்சியையே கலைச்சுடுவேன்.... நிர்வாகிகளை மிரட்டிய விஜயகாந்த்



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வியடைந்த தேமுதிக அதில் இருந்து மீண்டு வர பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இதில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிகவின் குடும்ப அரசியலை பற்றி ஒரு நிர்வாகி கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலின் போது தேமுதிக, திமுக உடன் கூட்டணி வைக்கும் என பெரிதும் எதிர் பார்க்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முதல் தேமுதிக தொண்டர்கள் வரை அதை தான் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அமைந்த கூட்டணியோ அனைவரது எதிர்பார்ப்பையும் தவிடு பொடியாக்கியது. மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்த தேமுதிக தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

திமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்திருந்தால் நல்ல வெற்றியை பெற்றிருக்கும், கட்சிக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்காது. திமுக உடன் கூட்டணி அமையாததற்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தான் காரணம் என பரவலாக பேசப்பட்டது. மேலும் அவரது மச்சான் சுதீஷின் தலையீடும் கட்சியில் இருப்பதாக பேசப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெளிப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மதுரை நிர்வாகி ஒருவர், நீங்கள் எல்லாவற்றிற்கும் எங்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறீர்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் பேச்சைக் கேட்டு, கூட்டணி முடிவை எடுக்கிறீர்கள். இதனால், நம் பலம் வீணாகி விட்டது என அந்த நிர்வாகி ஆதங்கப்பட்டதாக பேசப்படுகிறது.

இதனை கேட்ட விஜயகாந்த் கோபமடைந்து, இங்கு வந்திருக்கும் பலர் கட்சி தாவ முடிவு செய்துள்ளது எனக்கு தெரியும், அந்த தைரியத்தில் தான் இப்படி பேசுகிறீர்கள். கட்சியை எப்படி வளர்ப்பது என்பது எனக்கு தெரியும், நீங்கள் கிளம்புங்கள் என ஆவேசமாக விஜய்காந்த் கூறிவிட்டு வெளியேறியதாகவும் தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தேமுதிகவில் வெடித்தது குடும்ப அரசியல்: கேள்வி கேட்ட நிர்வாகி, கொந்தளித்த விஜயகாந்த்!



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக படுதோல்வியடைந்ததை அடுத்து வருகிற உள்ளாட்சி தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்து வரும் விஜயகாந்த் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் வாரியாக, நகரம், பேரூர், ஒன்றிய செயலாளர்கள் போன்ற நிர்வாகிகளுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை மாவட்ட நிர்வாகி ஒருவர் பேசிய பேச்சு விஜயகாந்தை கோபமூட்டியது. இதனால் கொந்தளித்த விஜயகாந்த் கட்சியினரிடையே கோபத்தை காட்டினார்.

எல்லாவற்றிற்கும் எங்களை அழைத்து ஆலோசனை நடத்தும் நீங்கள் குடும்ப உறுப்பினர்கள் பேச்சைக் கேட்டு, கூட்டணி முடிவை எடுக்கிறீர்கள் என அந்த நிர்வாகி பேசினார்.

இதனால் கோபமடைந்த விஜயகாந்த் இங்கு வந்திருக்கும் பலரும் திமுகவில் சேர முடிவு செய்துள்ளது எனக்கு தெரியும். அதை மனதில் வைத்தே, இப்படி குற்றச்சாட்டை கூறுகிறீர்கள்.

கட்சியை வளர்ப்பது எப்படி என்பது எனக்கு தெரியும், நீங்கள் கிளம்புங்கள் என ஆவேசமாக கூறிய விஜயகாந்த் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கொந்தளித்த விஜயகாந்த்: நீங்க கிளம்புங்க, நான் பார்த்துக்கிறேன்!



MK Stalin's Activity Against CM Jayalalitha

MK Stalin's Activity Against CM Jayalalitha


தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அனைத்து தரப்பு அரசியல் வாதிகளால் பேசப்பட்டவர் தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

சிறுவயதிலேயே அரசியல் எப்படி, அரசியல் மூலம் அ.தி.மு.க வை எப்படி வளம் சேர்க்க வேண்டுமென்றும், அதன் மூலம் கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் எப்படி நன்மை செய்ய வேண்டுமென்று பல்வேறு திட்டங்களை தீட்டி பல நன்மைகள் செய்ததோடு, அது போல நன்மை செய்ததையடுத்தும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மனதில் மிக பிரியமானவர்களில் தன் மகனை போல வலம் வந்தவர் செந்தில் பாலாஜி.

இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற போது எப்படியோ நமது அம்மா விடுதலையாக வேண்டுமென்று கூறி கரூர் மாவட்ட அளவில் மட்டுமில்லாமல் தமிழக அளவில் ஒரு கலக்கு கலக்கினார். இந்நிலையில், இவரது வளர்ச்சி பிடிக்காத கட்சியின் மூத்த நிர்வாகிகள் இவரை பற்றி அ.தி.மு.க பொதுச்செயலாளரிடமும், ஊடகங்களிடம் தவறான அணுகுமுறையை கொண்டு வந்தனர்.

அதில் கரூர் தம்பித்துரையும், நத்தம் விஸ்வநாதனும் தான் அதிக பங்கு உண்டு. இந்நிலையில் நடந்து முடிந்த 15 வது சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மட்டும் தேர்தல் தேதி மாற்றப்பட்டது. ஆனாலும் தேர்தல் துறையின் கண் துடைப்பிற்காக ஒரு தொகுதி மட்டும் என்றால் தேர்தல் ஆணையத்திற்கு மேல் பொதுமக்கள் சந்தேகம் ஏற்படும் என்று மற்றொரு தொகுதியான தஞ்சை தொகுதியையும் தேதி மாற்றம் செய்தது தமிழக தேர்தல் ஆணையம், இது தான் மக்களுக்கு தெரிந்தது.

மக்களுக்காக தெரியாதது மிகமிக பெரிய பூதாகரமான செய்தி பொதுமக்களின் பார்வைக்கு இங்கே, நன்கு படித்து புரிந்து கொள்ளவும்.

இந்திய தேர்தல் ஆணையமே திரும்பி பார்க்கும் வகையில் கரூரில் அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது, இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பணம் என்று கூறப்பட்டது. இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என, தகவல்கள் கிடைத்தன.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி. 10 ஆண்டுகளுக்கு முன் கரூர் பாலிடெக்னிக் கல்வி நிறுவன பங்குதாரராக இருந்தார். அதிலிருந்து விலகிய பின், புதிதாக, நிதி நிறுவனம் துவங்கி தன் மகன் அன்புநாதன்(42), பொறுப்பில் ஒப்படைத்தார்.

அவர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு பணம் சப்ளை செய்யும் பைனான்சியராக வலம் வருகிறார். அப்போது, உள்ளூர், அ.தி.மு.க., பிரமுகரும், தன் ஜாதியை சேர்ந்தவருமான செந்தில் பாலாஜியுடன் நட்பு ஏற்பட்டது. மேலும், திண்டுக்கல்லில் உள்ள அக்காவின் வீட்டுக்கு சென்று வரும்போது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடமும் பழக்கம் ஏற்பட்டது. அவரது மகன் அமர்நாத்துடன் பழக்கம் ஏற்பட்டு தொழிலில் அவருக்கு ஆதரவாளராக செயல்பட்டதோடு, அவரது பணத்துக்கும் பாதுகாப்பு கொடுப்பவராகவும், கொடுக்கல், வாங்கல் செய்யக்கூடியவராகவும் உருவெடுத்தார்.


கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், ஒவ்வொரு அமைச்சருக்கும், குறிப்பிட்ட தொகுதிக்கு பணம் சப்ளை செய்யும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வேலையை பாதுகாப்புடன் அன்புநாதன் செய்து கொடுத்ததாக, அப்போதே தகவல் பரவியது. அவர் கூறியபடி, திருச்சி, கோவை மண்டலங்களில் உள்ள தொகுதிகளுக்கு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பணம் சப்ளை செய்யப்பட்டது. எந்த பிரச்னையும் ஏற்படாமல், பாதுகாப்பாக பணம் சப்ளை செய்து கொடுத்ததால், தற்போதைய சட்டசபை தேர்தலுக்கு, பல அமைச்சர்களுக்கு அன்புநாதன் தேவைப்பட்டுள்ளார்.

அதனால், அவர் மூலம், பல கோடி ரூபாய், கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு, தொகுதி வாரியாக சப்ளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக, தி.மு.க., பிரமுகர்கள் அப்போது கூறினர்.

இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் தற்போதைய மக்களவை துணை சபாநாயகரும், கரூர் மக்களவை உறுப்பினருமான டாக்டர் மு.தம்பித்துரையை ஜெயிக்க வைக்க அவருடைய பணம் தேவைப்பட்டது. மேலும் இந்நிலையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நத்தம் விஸ்வநாதன், ஆத்தூர் தொகுதியில் மக்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற தி.மு.க எம்.எல்.ஏ ஐ.பி என்கின்ற ஐ.பெரியசாமியோடு மோத அ.தி.மு.க திட்டம் தீட்டியது.

இந்நிலையில் ஐ.பி ஜெயித்ததோடு, அவரது செல்வாக்கு மேலும் நீண்டது, எதிர்த்து நின்ற முன்னாள் மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சரும், மின் துறை அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனுக்கு தோல்வியை அடுத்து அவரது மாவட்ட செயலாளர் பதவியையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பறித்தார்.

மேலும் சட்டசபை தேர்தலில் நத்தம் விஸ்வநாதனுக்கு பணம் சப்ளை செய்ததை யாரோ தேர்தல் துறையிடம் மாட்டிக் கொடுக்க, அந்த பணம் செந்தில் பாலாஜியின் தேர்தல் செலவிற்காக என்று தப்புக் கணக்கு போட்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, பின்னர் அந்த பணம், நத்தம் விஸ்வநாதனுடையது என்று அறிந்த அவர் (ராஜேஷ் லக்கானி) ஷாக் ஆனார்.

ஏனென்றால் இவர் மின் துறை அமைச்சராக இருந்த போது அவருடைய கட்டுப்பாட்டில் வரும் எரிசக்தி துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்தவர் ராஜேஷ் லக்கானி, உடனே பழைய பாஸ் என்பதால், அப்படியே பிளைட்டையே திருப்பி போட்டதோடு, பாவம் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மீது பழியை போட்டதோடு, அந்த அன்புநாதனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட வீடியோ புட்டேஜ்களை கேட்டு தமிழக தலைமை செயலாளர் முதல், போலீஸ் உயரதிகாரிகள் வரை கரூர் மாவட்ட நிர்வாகத்தை டார்ச்சர் செய்தனர்.

அப்போது பாவம் அப்பாவியான வெளிமாநிலத்தை சார்ந்த பெண் எஸ்.பி வந்திதா பாண்டேவை, போலீஸ் உயரதிகாரிகள் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தனர். உடனே மேலும் அவர் வெளி மாநிலத்தவர் என்பதால் மிகுந்த வேதனையுடன் இருந்த நிலையில் அவர் தற்கொலை முயற்சித்தார் என்றும் துப்பாக்கியுடன் சுடப்பட்டார் என்று வீண் வதந்தி பரப்பபட்டு அவரது புகழையும் பாழாக்கியது தேர்தல் துறை.

பின்னர் எஸ்.பி அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டதோடு, அரவக்குறிச்சி தேர்தலையும் ராஜ தந்திரியாக நிறுத்தியவர்கள், நத்தம் விஸ்வநாதனும், ராஜேஷ் லக்கானியும் ஆவார்கள்,. காரணம் பணம் மாட்டப்பட்ட நிலையில் கரூரின் அப்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ வும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி எந்த வித உதவியும் செய்ய வில்லையாம்.

ஒரே வார்த்தை சட்டம் தன் கடமையை செய்யும் என்ற பாணியில் அவருடைய தேர்தல் வாக்கு சேகரிப்பில் தான் முழுமையாக ஈடுபட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் அன்புநாதனின் வீடு மற்றும் பணம் கைப்பற்றப்பட்ட குடோன்கள் அனைத்தும் செந்தில் பாலாஜி போட்டியிடும் அரவக்குறிச்சியே ஆகும்.

இந்நிலையில் இவரை எதிர்த்து போட்டியிடுபவர், அந்த தொகுதியின் சிட்டிங் தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் சுமார் ரூ 54 கோடியை தேர்தல் கணக்கில் அவரது வருமானம் என்று காட்டியவர். மேலும் அன்புநாதனின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கூட அறிக்கை கொடுத்தாரே தவிர, சிட்டிங் தி.மு.க எம்.எல்.ஏ வும், தி.மு.க வேட்பாளருமான கே.சி.பி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஏனென்றால் அந்த பணம் இங்கு விநியோகிக்க படவில்லை என்றும், ஐ.பி என்கிற ஐ.பெரியசாமி தொகுதிக்குதான் செல்கிறது என்று மொளனம் காட்டினார். இதை அனைத்தையும் சாதகமாக பயன்படுத்திய தேர்தல் துறை நத்தம் விஸ்வநாதன் ஜெயித்து விடுவார். ஐ.பெரியசாமி ஜெயித்து விடுவார் என்று முன்னதாகவே சர்வே எடுத்தவுடன், உடனே இவரது பணம் பட்டுவாடாவிற்கு உதவி செய்யாத செந்தில் பாலாஜியின் தொகுதியில் நத்தம் விஸ்வநாதனும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒரு பார்வை வைத்து மொத்த தேர்தலையும் இந்த தொகுதியில் நிறுத்தினர். இதற்கு ஊறுகாய் ஆனவர் பா.ம.க வேட்பாளர் பாஸ்கர் ஆவார்.

ஒரே ஒரு கேள்வி யோசித்து நீங்களே பாருங்கள்.. எந்த தொகுதியில் பணத்தை பிடித்தார்கள், யாருக்காக இந்த பணம் சென்றது, ஏன் அந்த பணத்திற்கு எதிர்கட்சி வேட்பாளர் அத்தொகுதியில் கண்டனம் தெரிவிக்க வில்லை, மேலும் எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் கூறுவது போல பணம் பட்டுவாடா தமிழகத்தில் நடந்து முடிந்த 232 தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது, என்பதை அவர்களே சொல்லி உள்ளார்கள். அப்படி இருக்க அரவக்குறிச்சி தொகுதி மட்டும் ஏன் ? நன்றாக யோசித்தால் விடை தெரியும் ஒட்டு மொத்தமாக செந்தில் பாலாஜியை பழிவாங்கவே என்பது தெரியும்.

மேலும் தற்போது நத்தம் விஸ்வநாதன் கழக அமைப்பு செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் அ.தி.மு.கவிற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தற்போது பதவி உயர்வு பெற்ற நத்தம் விஸ்வநாதன் ஒரு புறம், கரூர் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை இருவரும் சேர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதாவது செய்வார்கள் என்று செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நிலையில் தமிழகம் அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் மாணவ, மாணவிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றவர் செந்தில் பாலாஜி ஏனென்றால் முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளர் ஜெயலலிதா பெயரில் வருடந்தோறும் விளையாட்டு போட்டிகளை நடத்தி வாலிபர்கள், மாணவர்கள், மாணவிகளிடம் மிகுந்த நற்பெயரை பெற்றுள்ளவர். அந்த போட்டிகள் கூட அம்மா என்றழைக்கப்படும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிற்காக தான்.

அ.தி.மு.க கட்சியில் செந்தில் பாலாஜியை ஒரு தீண்டத்தகாதவர் போல் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிடம் காட்டியுள்ள பெருமை மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் தம்பித்துரைக்கே சாறும், அம்மாவிற்காக நான், அம்மாவால் நான் என்று அன்றும், இன்றும், என்றும் கட்சி வேலைகள் உள்பட சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்ட செந்தில் பாலாஜியை ஒரு கூண்டுக்குள் வைத்து வேடிக்கை பார்க்கும் அவல நிலைக்கு செந்தில் பாலாஜி தள்ளப்பட்டுள்ளார்.

தன் பிள்ளை போல் பாசத்தை காட்டி எனக்காக, பேருந்து மற்றும் போக்குவரத்து துறையில் ஏராளமான மாற்றங்களை செய்த செந்தில் பாலாஜி என்று நினைத்து அவ்வப்போது கட்சி நிர்வாகிகளிடம் பெருமை பட்ட ஜெயலலிதா செந்தில் பாலாஜி மேல் பரிதாபம் காட்டினால் மட்டுமே செந்தில் பாலாஜியின் விலாசம் தெரியும் என்பது நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆப்பு? : காப்பாற்றுவாரா ஜெயலலிதா?



முக தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் சரியான இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதற்கு விளக்கம் கொடுத்த நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் “திமுக என்றால் கருணாநிதி தானே. கருணாநிதி தானே கட்சியின் தலைவர். அப்படி இருக்கும் போது சட்டமன்ற கட்சியின் தலைவர் என்ற பதவி அவருக்கு தானே கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தங்களுக்குள்ள பிரச்சனையில், உட்கட்சி பிரச்சனையில், திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தன்னை தேர்ந்தெடுக்க செய்துவிட்டார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு வெறும் சட்டமன்ற உறுப்பினர் அந்தஸ்து தானே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதி சட்டமன்ற விவாதங்களில் பங்கேற்க மாட்டார் என்ற பழி தன் மீது வந்துவிடக்கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலின் பிரச்சனையை திசை திருப்புகிறார்” என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடுள்ளதாவது:

"17.6.2016 அன்று நான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தலைவர் கலைஞருக்கு அவையில் கோரிய இருக்கை ஒதுக்கப்படவில்லை என்றும், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க.வுக்கு அவையில் ஆளுநர் உரை மீது பேச ஒவ்வொரு நாளும் மூன்று பேருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்றும், பேரவை வளாகத்தில் முறைப்படி எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய அறை 89 உறுப்பினர்கள் அமர்வதற்கு ஏற்ற இடமாக அளிக்க வேண்டுமென்றும், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கடைசி நாளன்று முதல்வர் பதிலுரை ஆற்றுவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் பேசுகின்ற மரபு தொடரப்பட வேண்டுமென்றும் கழகத்தின் சார்பில் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தி.மு.கழகத்தின் இந்தக் கோரிக்கைகளுக்கு பேரவைத் தலைவர் உரிய தீர்வு காணாவிட்டால், தலைவர் கலைஞருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் கூறி, அனைத்து நாளேடுகளிலும் எனது பேட்டி வெளிவந்துள்ளது. ஆனால் எனது கோரிக்கைகளுக்கு பேரவைத் தலைவர் உரிய பதில் அளிப்பதற்கு முன்பு, அவை முன்னவர், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவரின் அதிகாரத்தை தன் கையிலே எடுத்துக் கொண்டு, நான் கொடுத்த பட்டியலில் என் தந்தையின் பெயர் இல்லை என்றும், தந்தைக்கும் தனயனுக்கும் உள்ள போட்டிதான் காரணம் என்றும் கழகத்திற்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வகையிலே சிண்டு முடியும் வேலையில் இறங்கியிருப்பது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றதல்ல.

பொதுவாக அமைச்சர் பன்னீர்செல்வம் இப்படியெல்லாம் அறிக்கை விடக்கூடியவர் அல்ல. இருந்தாலும் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு கொடுத்திருப்பதைப் போலத்தான் தெரிகிறது. தந்தைக்கும், தனயனுக்கும் இடையே போட்டி என்றெல்லாம் பன்னீர்செல்வமும், அவர்களை ஆதரிக்கும் ஒரு சில நாளேடுகளும் தொடர்ந்து சொல்லி வருவது முற்றிலும் தவறான செய்தியாகும். கழகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அ.தி.மு.க.வினர் இவ்வாறு மேற்கொள்கின்ற முயற்சி வெற்றி பெறாது. பேரவையில் தி.மு.கழகத்தைச் சேர்ந்த எந்தெந்த உறுப்பினர்களுக்கு எங்கு இடம் ஒதுக்க வேண்டுமென்று நான் கொடுத்த பட்டியலில் தலைவர் கலைஞரின் பெயர் இடம் பெறவில்லையே ஏன் என்று கேட்டிருக்கிறார்.

தலைவர் கலைஞருக்கு, அவரது உடல் நலத்திற்கு ஏற்ற இடம் ஒதுக்கப்பட வேண்டுமென்று பேரவைத் தலைவருக்கு எங்கள் கட்சியின் “கொறடா” சக்கரபாணி மூலமாக தனிக்கடிதம் ஒன்று பேரவைத் தலைவரிடம் தரப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை நான் தான் தலைவரிடம் காட்டி, அவர்களுடைய ஒப்புதலுடன்தான் எங்கள் கட்சியின் கொறடா சக்கரபாணி மூலமாக பேரவைத் தலைவரிடம் தரப்பட்டிருக்கிறது. தலைவர் கலைஞரின் இருக்கை பற்றி இவ்வாறு தனிக்கடிதம் கொடுப்பது என்ற எண்ணத்தில்தான், நான் முதலில் கொடுத்த பட்டியலில் தலைவரின் பெயர் இடம் பெறவில்லையே தவிர, பன்னீர் செல்வம் அறிக்கையிலே கூறியிருப்பது போல, அதற்கு எந்தவிதமான தனிக்காரணமும் கிடையாது.

பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நான் தலைவரிடமிருந்து தட்டிப்பறித்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதைவிட கேவலமான ஒரு குற்றச்சாட்டு இருக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்கு அளித்தவரே தலைவர் கலைஞர்தான். இன்னும் சொல்லப்போனால் கடந்த முறை சட்டமன்றக் கட்சித் தலைவராக, தலைவர் அப்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதிலும், என்னைத்தான் அறிவித்தார்கள். இன்னும் சொல்லப் போனால், கடந்த முறை தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோதே, ஆளுநர் உரைக்கு பதில் சொல்கின்ற வாய்ப்பை, முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் எனக்குத்தான் வழங்கினார். பன்னீர்செல்வம், அவருடைய குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் உள்ள நெருக்கடியை மனதிலே கொண்டு, எங்கள் கழகத்திற்குள்ளேயும், குடும்பத்திற்குள்ளேயும் குழப்பம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒ.பி.எஸ் சிண்டு முடியும் வேலையில் இறங்கியுள்ளார் : மு.க.ஸ்டாலின் அதிரடி



அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாள்ர் ஹிலாரி கிளிண்டனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் டெனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இதில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இது பெருமை மிகுந்த தருணம் என்றும், அதிபர் தேர்தலில் போடிட்யிடுவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு நம்பிக்கையும், குரலையும் அளித்துள்ளதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஹிலாரிக்கு ஜெயலலிதா வாழ்த்து



முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது அதிரடி அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்காக தமிழக அரசு வழங்கிய வாகனத்தை திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் திரும்ப ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில், அதிமுக 134 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுக 89 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமர்ந்தது. மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது மாநில அமைச்சர் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவியாகும்.

எனவே, அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட வாகனம், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சலுகளைகலும் வழங்கப்படும்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு அரசு சார்பில் இன்னோவா கார் வழங்கப்பட்டது. ஆனால், அந்த காரை மு.க.ஸ்டாலின் திரும்ப ஒப்படைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர், தனது சொந்த காரை பயன் படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளாராம்.

சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை ஒதுக்காமல் அரசு புறக்கணிப்பு செய்த காரணத்தினால் தான் மு.க.ஸ்டாலின் இந்த முடிவு எடுத்துள்ளாராம்.

கிளம்பிட்டாருய்யா....... அண்ணன் கிளம்பிட்டாருய்யா.... என திமுகவில் குரல் ஒழித்த வண்ணம் உள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் ஆட்டம் ஆரம்பம்



தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வைத்தார். பின்னர் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குளச்சல் துறைமுகம் குறித்து பேசியுள்ளார். குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைவதற்கு அந்த பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறார் மத்திய அமைச்சர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த துறைமுகம் விவகாரத்தில் மிகப்பெரிய அரசியலே நடந்து கொண்டிருக்கிறது. இந்த துறைமுகம் அமைவதற்கு மீன்வர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு பக்கம் இருக்க. இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தடையாக இருக்கிறார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் இந்த துறைமுகம் அமையாவிட்டால் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களத்தில் இறங்கி போராடுவேன் என எச்சரிக்கையும் விடுத்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில் டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த அவர், குளச்சல் துறைமுகத்துக்காக 500 ஏக்கருக்கு மேல் இடம் தேவைப்படுகிறது என்றும் மீனவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி இடம் ஒதுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது: ஜெயலலிதாவிடம் கேட்ட பொன்.ராதாகிருஷ்ணன்



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக படுதோல்வியடைந்தது. அதன் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட்டை இழந்தார். கட்சியின் வாக்கு வங்கியும் 2.5 சதவீதமாக குறைந்தது.

இந்நிலையில் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து கட்சியினருடன் ஆலோசித்து வரும் விஜயகாந்த் சட்டசபை தேர்தலில் தான் பணம் வாங்கியதாக வரும் குற்றச்சாட்டுக்கு கட்சியினரிடம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

தேர்தலில் பணம் வாங்கிவிட்டோம் என்று வரும் தகவல்கள் பொய்யானது. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என கூறிய விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்ததற்கு காரணம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் என கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் விஜயகாந்த் கூறியதாக பேசப்படுகிறது.

மேலும், மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்தது தவறான முடிவு எனச் சொல்கிறார்கள் எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டுவோம். நாம் இழந்த செல்வாக்கை வரும் தேர்தல்களில் மீட்டெடுப்போம் என நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கூறியதாக தகவல்கள் வருகின்றன.

விஜயகாந்த் பணம் வாங்கவில்லை: மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்ததுக்கு காரணம் வேறு!