தைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ஜெயலலிதா சவால்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவு குறித்து பேசிய போது திமுக உறுப்பினர்கள் பதில் சொல்ல முயன்றதால் அமளி ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்து சட்டசபைக்கு வெளியே சென்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். கச்சத்தீவு குறித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சத்தீவு தொடர்பாக நான் பேசும் போது உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றால், கூச்சல் போடுவதா? கூச்சல் போடுவதால் என்ன ஆகப்போகிறது? உங்கள் தலைவர் பதில் சொல்லட்டும் என கூறினார்.
மேலும், திமுக தலைவர் கருணாநிதி இந்த அவையின் உறுப்பினர். அவர் இங்கே வந்து பதில் சொல்லியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு வெளியே அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த அறிக்கையைப் பற்றித்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களால் முடியவில்லை என்றால் உட்காருங்கள். அறிக்கை கொடுத்தவரே இங்கே வந்து பதில் சொல்லட்டும் என்றார்.
கருணாநிதி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நான் கேட்கின்ற கேள்விகள் கருணாநிதியைப் பார்த்துத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்குப் பதில் சொல்ல தைரியமிருந்தால் திமுக உறுப்பினர்கள் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்ல தைரியமில்லை என்றால், அவர்களுடைய தலைவரை பதில் சொல்வதற்கு இங்கே அழைத்து வரவேண்டும் என ஜெயலலிதா சவால் விடுத்தார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment