சுவாதி கொலையில் சம்பந்தப்பட்ட ராம்குமாரின் கைதுபற்றி சென்னை மாநகர ஆணையர் டி.கே.ராஜேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது “கடந்த மாதம் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக சென்னை போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தோம்.

இந்த விசாரனையில் பொதுமக்களும், சுவாதியின் குடும்பத்தினரும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வந்தனர். மேலும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தொலைபேசி மூலம் ஏராளமான தகவல்களை கூறிவந்தனர்.

அந்த தகவல்களின் அடிப்படையில் நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் வசிக்கும் ராம்குமார் என்பவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே நேற்று இரவு 11 மணியளவில், திருநெல்வேலி போலீசார் ராம்குமாரின் வீட்டிற்கு சென்றனர். போலீசார் தன்னை கைது செய்வதை அறிந்த ராம்குமார் பிளேடால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டார். அதன்பின் அவரை போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவரின் ஆலோசனைப்படி ராம்குமார் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்படுவார்.

ராம்குமர் சென்னை சூளைமேடு பகுதியில் கடந்த 3 மாதங்களாக தங்கி வேலை செய்து வந்துள்ளார். சுவாதியிடம் அவர் பழக முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அது முடியவில்லை என்ற கோபத்தில் அவர் இந்த கொலையை செய்திருக்கலாம். விசாரனைக்கு பிறகே உண்மைகள் தெரியவரும். அவருக்கு எதிரான ஆதாரங்களை நிதிமன்றத்தில் சமர்பிப்போம்”என்று கூறினார்.

மேலும், ராம்குமார் எப்போது சென்னைக்கு அழைத்து வரப்படுவார்? அவரின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? கொலையின் நோக்கம் என்ன? ஒருதலைக்காதல் காரணமாக கொலை நடந்ததா? அவர்தான் குற்றவாளி என்பதற்கு முக்கியமான ஆதரங்கள் என்ன? என்ற கேள்விகளுக்கு அவர் பதில் கூறவில்லை.

பெரும்பாலன கேள்விகளுக்கு விசாரனைக்கு பிறகே தெரியவரும். அதற்கு அனுமதியுங்கள். பின்னால் கூறுகிறோம் என்றே பதிலளித்தார்.

சுவாதி கொலை; ஒருதலை காதல்தான் காரணமா? : சென்னை கமிஷனர் பேட்டி



சந்தன கடத்தில் வீரப்பனை மையமாக வைத்து பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி தமிழில் வெளியாகியுள்ள ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற திரைப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தமிழில் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற தலைப்பில் அந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என் கணவரை பற்றி பலரும் தவறுதலாக படம் எடுக்கிறார்கள். அவரது பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதே அவர்களின் நோக்கம். முன்னாள் காவல் அதிகாரி தேவாரம் என் கணவரை பல வருடங்களாக தேடினார். அவர் புத்தகம் எழுதினால் கூட அதில் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் விஜயகுமாருக்கு என்ன தெரியும்? அவர் என் கணவரை மோரில் விஷம் வைத்து கொன்றுள்ளார். இந்த உண்மையை அவர் சொல்ல தயாரா?

என் கணவர் பற்றி விஜயகுமார் தவறான தகவல் கொடுத்து வருகிறார். ஆரம்ப காலத்தில் என் கணவர் சந்தன மரம் கடத்திய போது நான் அவருடன் இருந்தேன். எனக்கு அவரைப் பற்றி தெரியும். அவர் ஏன் தலைமறைவாக இருந்தார் என்ற உண்மைகள் விரைவில் வெளிவரும். அதுவரை பொறுத்திருங்க்கள்.

கில்லிங் வீரப்பன் என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் முற்றிலும் தவறானது. அதை யாரும் பார்க்க வேண்டாம். அதேபோல், என் கணவருக்கும் பிரபாகரனுக்கும் தொடர்பு இருப்பது போல் என்று கூறப்படுவது தவறான தகவல்” என்று அவர் கூறினார்.

வில்லாதி வில்லன் வீரப்பன் படத்தை யாரும் பார்க்காதீர்கள் : முத்துலட்சுமி அதிரடி



தனியார் உட்பட அனைத்து துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் பிரசவ விடுமுறை அளிக்க வகை செய்யும் மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது, அரசு துறையில் பணிபுரியும் அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் அல்லது ஆறு மாதம் பிரசவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியாரை பொறுத்தவரையில் பெண்களுக்கு 3 மாதங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கிறது. சிறிய நிறுவனங்களில் இந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை.

எனவே, தனியார் துறையில் பணி புரியும் பெண்களுக்கும், அரசு துறை போல் பிரசவ விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்பியது. எனவே இதுகுறித்த புதிய மசோதா வரும் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

புதிய பேறுகால சலுகை மசோதா குறித்து அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் கூறியபோது “தனியார் துறையில் தற்போது 12 வாரமாக உள்ள பேறுகால விடுமுறையை, 26 வாரங்களாக அதிகரிப்பதற்கான மசோதா, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றுதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படும்.

மேலும், பெண்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்று கட்டாயபப்டுத்த முடியாது. சில அமைப்புகள், துறைகளில் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இச்சட்டம் அமலாக்கப்பட்ட பிறகு மற்ற அமைப்புகளில் 26 வார பேறுகால விடுப்பு அவர்களுக்குக் கிடைக்கும்” என்று கூறினார்.

அரசு ஊழியர்கள் போல் தனியார் துறைக்கும் 26 வார பிரசவ விடுமுறை



சுவாதி கொலையில் கைது செய்ய முயன்றபோது, பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்ட கொலையாளி ராம்குமாரின் உடல்நலம் தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை படுகொலை செய்த ராம்குமாரை, அவரது சொந்த ஊரான செங்கோட்டை மீனாட்சி புரத்தில் போலீசார் பிடிக்க முயன்ற போது, வீட்டிலிருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

இதையடுத்து, போலீசார் உடனடியாக ராம்குமாரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட சிகிச்சை முடிந்த பின்னர் மேல் சிகிச்சைக்காக 12:50 மணியளவில் தென்காசியில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

1:40 மணிக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அதிகாலை 3:15 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் காலை 5 மணிக்கு ராம்குமார் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் அவரிடம் பேசிய காவல் துறை வாக்குமூலம் வாங்கியதாகவும், தான் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்தன.
அவர் இன்னும் ஓரிரு நாட்களில் பூரண குணமடைவார். அப்போது அவர் வழக்கம் போல் பேசுவார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் ராம்குமார் உடல் நலம் தேறி வருகிறார் என்று தற்போது மருத்துவர்கள் கூறினர்.

இருப்பினும், அவர் மெதுவாக போலீசாரிடம் பேசி வருவதாகவும், வாக்குமூலம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலம் தேறி வருகிறார் ராம்குமார் : போலீசாரிடம் வாக்குமூலம்?



தமிழகத்தையே அதிர வைத்த நுங்கம்பாக்கம் ரயில் நிலைய இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை காவல்துறையினர் இன்று பிடித்தனர். விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியை பிடித்த காவல் துறைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு வேலைக்கு செல்ல ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் காத்திருந்த இளம்பெண் சுவாதியை அரிவாளால் வெட்டிய மர்ம நபர் தப்பியோடினார்.

இதனையடுத்து ரயில்வே காவல் துறையிடம் இருந்து இந்த வழக்கு தமிழக காவல் துறைக்கு மாற்றப்பட்டது. பல்வேறு இடங்களில் விசாரணை, பல்வேறு குழப்பங்கள் என குற்றவாளியை பிடிக்க முடியாத சூழல் நிலவி வந்தது.

தமிழகமே இந்த வழக்கை உற்றுநோக்கி கொண்டிருந்தது. கொலையாளி யார், வழக்கின் விசாரணை எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பதை பொதுமக்கள் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அதிரடி திருப்பமாக கொலையாளியை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சி புரத்தில் காவல்துறை பிடித்தது. அப்போது குற்றவாளி தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக காவல்துறை சிறப்பு வாய்ந்த காவல்துறை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்றும், குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த காவல்துறைக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

சுவாதி கொலையாளியை பிடித்த காவல்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ஒரு வாரம் கழித்து காவல் துறை குற்றவாளி ராம்குமாரை கைது செய்துள்ளனர். பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த இந்த வழக்கு தற்போது கொலையாளியின் கைது மூலம் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

சுவாதி கொலை முதல் குற்றவாளி கைது வரையிலான நிகழ்வு:-

* சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் செங்கல்பட்டு அருகில் உள்ள இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் சுவாதி என்னும் இளம்பெண் மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.

* காலையில் ரயில் நிலையத்தில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.

* 6:30 மணியளவில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடலை 8:30 மணிக்கு பின்னரே ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே காவல் துறையினர் எடுத்தனர். இடைப்பட்ட நேரத்தில் யாருமே சுவாதியை மருத்துவமனைக்கு எடுத்து சொல்லவோ கொலை செய்தவனை பிடிக்கவோ முன்வர வில்லை.

* சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் சில மணி நேரத்திலேயே தமிழகம் முழுவதும் பரவியது. தமிழகமே இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ந்தது. சுவாதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பாத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

* ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் சுவாதியை கொலை செய்தவன் யார் என்பது தெரியவில்லை.

* ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவின் மூலம் சுவாதியை கொலை செய்தவன் இவன்தான் என சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டது காவல் துறை.

* பின்னர் அதனை உறுதி செய்யும் விதமாக அந்த நபர் கொலை செய்துவிட்டு ரயில் நிலையத்தில் ஓடும் காட்சியும் பின்னர் ரயில் நிலைய சுவர் வழியா குதித்து ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும் காட்சியும் பதிவான சிசிடிவி வீடியோ வெளியானது.

* இந்த வழக்கை விசாரிக்கும் திறமை ரயில்வே போலிசாருக்கு இல்லை என்பதால், இது தமிழக காவல் துறைக்கு மாற்றப்பட்டது.

* சுவாதியை அந்த நபர் பல நாட்களாக பின் தொடர்ந்து வந்தது, சுவாதியின் தோழியும் இரண்டு முறை அவனை பார்த்துள்ளார் என கூறியது, அவன் யாரென்றே தெரியவில்லை என சுவாதி தனது தோழியிடம் கூறியது உள்ளிட்ட பல தகவல்கள் காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

* மேலும் சுவாதி, தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவதாக தனது ஆண் நண்பர் ஒருவரிடமும் கூறியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

* சுவாதியை கொலை செய்ய கொலையாளி பயன்படுத்திய அரிவாள் கோடம்பாக்கம் செல்லும் தண்டவாளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதில் கொலையாளி தனது கைரேகையை அழித்து விட்டு போட்டு சென்றுள்ளான். கொலை நடந்த இடத்தில் இருந்து கொலைகாரனின் சட்டை பட்டன்கள் இரண்டு கைப்பற்றப்பட்டது.

* கொலை செய்தவன் சுவாதியின் செல்போனை எடுத்து சென்றுள்ளான் என்பது தெரியவந்தது. 24-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ஆன் செய்தே வைத்திருந்திருக்கிறான். பின்னர் அந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறான். சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது அவரது செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. சுவாதியின் வீடும் சூளைமேட்டில் தான் உள்ளது. சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது காட்டிய இடம் சுவாதியின் வீட்டின் அருகில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்நிலையில் சுவாதியை கொலை செய்த குற்றவாளி சென்னை திருவான்மியூரில் ஜூன் 28-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டதாக வதந்தியும் பரவியது.

* இந்நிலையில் சுவாதியை கொலை செய்த குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் வீடியோ காட்சி இன்று காவல் துறையிடம் சிக்கியது. ஆனால் இந்த வீடியோ காட்சி தெளிவில்லாமல் இருப்பதால் வண்டியின் எண் தெளிவாக தெரியவில்லை. இதனால் குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

* இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க காவல் துறை 8 தனிப்படையை அமைத்தது. இந்நிலையில் கூடுதலாக மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுவாதி கொலை வழக்கில் மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

* குற்றவாளி எடுத்து சென்ற சுவாதியின் செல்போன் இரண்டு மணி நேரம் சூளைமேடு பகுதியில் இருந்ததால் கொலையாளி அங்கு இருக்கலாம் என காவல் துறையின் பார்வை சூளைமேடு பக்கம் திரும்பியது. சூளைமேட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும், மேன்சன்களிலும் காவல் துறை குற்றவாளியின் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தி வந்தனர்.

* இந்த விசாரணையில் A.S.மேன்சனின் காவலாளி கொடுத்து தகவலை அடுத்து காவல் துறை அங்கு விசாரணை மேற்கொண்டு குற்றவாளி ராம்குமார் என கண்டுபிடித்து. விடுதியில் இருந்து அவனது விலாசம் உட்பட தகவல்களை பெற்று அவனது சொந்த ஊரான மீனாட்சி புரம் காவல் நிலையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.

* காவல் துறை அந்த மேன்சனில் ராம்குமார் தங்கி இருந்த அறையில் சோதனை செய்ததில் கொலை செய்தபோது அவர் அணிந்திருந்த இரத்த கறை படிந்த சட்டையை கைப்பற்றினர்.

* மீனாட்சிபுரம் காவல் நிலைய காவலர்கள் மப்டியில் ராம்குமாரை நோட்டமிட்டு அவர் அங்கு இருப்பதை உறுதி செய்து சென்னைக்கு தகவல் அனுப்பினர். இதனையடுத்து ராம்குமாரை கைது செய்ய உடனடியாக நெல்லைக்கு விரைந்தது தனிப்படை.

* ரயில்வே காவல்துறை அதிகாரிகள் பாஸ்கர், டி.எஸ்.பி. சங்கர்‌, தென்காசி காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன்‌ மற்றும் தனிப்படை போலீசார் நேற்றிரவு 10 மணி அளவில் ராம்குமாரின் இல்லத்தை சுற்றி வளைத்தனர்.‌

* அவரது வீட்டை காவல் துறை சுற்றிவளைத்த போது அங்கிருந்த நாய் குலைத்ததால் ராம்குமார் மற்றும் அவரது தாத்தா தூக்கத்தில் இருந்து முழித்துவிட்டனர். காவலர்கள் கைது செய்ய வருவதை அறிந்த அவரது தாத்தா குரல் எழுப்பியுள்ளார்.

* இதனையடுத்து ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக ராம்குமாரின் வீட்டில் தடாலடியாக நுழைந்த காவல் துறை தற்கொலைக்கு முயன்ற ராம்குமாரை தடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரைந்தனர்.

* இரவு 11:40 மணிக்கு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ராம்குமார். முதல் கட்ட சிகிச்சை முடிந்த பின்னர் மேல் சிகிச்சைக்காக 12:50 மணியளவில் தென்காசியில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

* 1:40 மணிக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அதிகாலை 3:15 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் காலை 5 மணிக்கு ராம்குமார் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.

* பின்னர் அவரிடம் பேசிய காவல் துறை வாக்குமூலம் வாங்கியதாகவும், தான் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.

இவ்வாறாக ஒரு வார காலமாக நீடித்து வந்த சுவாதி கொலையாளி குறித்த மர்மங்கள் இன்று தெளிவானது. ஆனால் கொலைக்கான காரணம் என்ன? யார் யாருக்கு தொடர்பு உள்ளது போன்றவை ராம்குமார் முழுமையாக காவல் துறையின் கட்டுப்பட்டுக்கு வந்த பின்னர் விசாரணையில் தெரிய வரும்.

சுவாதி கொலை: நுங்கம்பாக்கம் முதல் மீனாட்சிபுரம் வரை ஒரு அலசல்



சுவாதி கொலையில், ராம்குமார் கைது செய்யப்பட்டதற்கு, அவர் தங்கியிருந்த விடுதியில் அவருடன் தங்கியிருந்த ஒருவர் கொடுத்த தகவல்தான் காரணம் என ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

அதாவது, சுவாதியை ரயில் நிலையத்தில் வெட்டிக் கொன்று விட்டு, நேராக தான் தங்கியிருகும் விடுதிக்கு சென்ற ராம்குமார், ரத்தம் படிந்த தனது சட்டையை அங்கே ஹேங்கரில் தொங்க விட்டுள்ளார். அதன்பின், அன்று இரவு 12 மணியளவில், தனது சொந்த ஊரான செங்கோட்டைக்கு கிளம்பி சென்று விட்டார்.

ஆனால், போலீசாருக்கு கொலையாளி யார் என்று கண்டி பிடிப்பது பெரும் சவாலாக இருந்தது. அதானல், சூளைமேடு பகுதி முழுவதும் அவர்கள் சல்லடை போட்டு தேடி வந்தார்கள். போலீசாருக்கு பலரும் தொலைபேசியில் அழைத்து எராளமான தகவல்களை கூறி வந்தனர். இருந்தாலும், குற்றவாளியை பிடிக்க சரியான வழி கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்நிலையில், ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் தொலைபேசியில் ஒருவர் அழைத்துள்ளார். மேலும், “சுவாதியை கொலை செய்த கொலையாளி எங்கள் விடுதியில் தங்கியிருந்தான். உடனே வாருங்கள்” என்று கூறியுள்ளார். பரபரப்பான அந்த அதிகாரி உடனே அங்கு விரைந்து சென்று விசாரணை செய்துள்ளார்.

அதாவது, அந்த விடுதியில் ராம்குமாருடன் தங்கியிருந்த, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், ஆங்கரில் மாட்டியிருந்த ராம்குமாரின் சட்டை பார்க்க, அவருக்கு பொரி தட்டியுள்ளது. தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டப்படும் ராம்குமார் அணிந்திருக்கும் உடைதான் அது. மேலும், அந்த சட்டையில் படிந்துள்ள ரத்தக்கறையை பார்த்ததும் அவர் உடனே, விடுதியின் மேலாளரிடம் சென்று இதுபற்றி கூறியுள்ளார்.

அதன் பின்னர்தான் போலீசார் லாவகமாக செயல்பட்டு ராம்குமாரை கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

ராம்குமாரை கைது செய்ய காரணமான ரூம்மேட் : பகீர் தகவல்கள்



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொலை செய்த ராம்குமார் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த இவர் காவல் துறை கைது செய்ய வருவதை அறிந்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர்.

ராம்குமாருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்த பின்னர் ராம்குமார் பேச ஆரம்பித்ததாகவும், காவல் துறை அவரிடம் பேச்சு கொடுத்து வாக்குமூலம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

ராம்குமார் தனது வாக்குமூலத்தில், நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முழுமையாக முடிக்காமல் சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போதுதான் சுவாதியுடன் அறிமுகம் கிடைத்து கடந்த 4 மாதமாக பழகி வந்ததாக கூறினார்.

மேலும், தான் வேலைக்கு நடந்து செல்லும் போது சுவாதியுடன் பேச ஆரம்பித்ததாகவும், தன்னை பொறியியல் பட்டதாரி என அறிமுகம் செய்துகொண்ட ராம்குமார் நாளடவில் சுவாதியை காதலிக்க ஆரம்பித்ததாகவும் கூறினார்.

நான், பொறியியல் படிப்பை முடிக்காததும், ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிந்த சுவாதி என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இந்நிலையில் என்னுடைய காதலை சுவாதியிடம் கூறினேன். சுவாதி என்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாமல் என்னை சந்திப்பதையும் தவிர்த்தார்.

பின்னர் வேலைக்கு ரயில் நிலையத்துக்கு வரும்போது அவரது தந்தையுடன் வர ஆரம்பித்தார். இதனால் சுவாதியை சந்திக்க என்னால் முடியவில்லை. பின்னர் 2 முறை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை சந்தித்து எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி அவரிடம் கெஞ்சினேன்.

ஆனால் எனது காதலை ஏற்றுக்கொள்ளாத சுவாதி, உனக்கும் எனக்கும் எந்தவித பொருத்தமும் இல்லை என திட்டி எனது காதலை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்து சுவாதியை கொல்ல திட்டமிட்டு இரண்டு நாட்களாக பின் தொடர்ந்தேன்.

இறுதியாக கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை சந்தித்து எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி மீண்டும் கெஞ்சினேன். ஆனால் அவள் அப்பொழுதும் எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுவாதியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் ராம்குமாரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனல் அவர் அந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.

காதலிக்க மறுத்ததால் சுவாதியை கொன்றேன்: கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்



சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொலை செய்தவன் என ஒருவரின் புகைப்படம் நேற்று முதல் பரவி வருகிறது. ஆனால் அந்த புகைப்படத்தில் உள்ளவர் சுவாதியை கொலை செய்தவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குற்றாவளி யார் என்பதை கண்டறிய காவல் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மக்களும் இந்த கொலை வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் குற்றவாளி யார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்.

சுவாதியை கொடூரமாக கொலை செய்ததால் குற்றவாளி மீது பொதுமக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த கொலைக்கு தொடர்பில்லாத ஒருவரின் புகைப்படம் பரபரப்பப்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அந்த புகைப்படத்தில் உள்ள நபர் கடந்த 2011-ம் ஆண்டு பாஜக தலைவர் அத்வானி கோவைக்கு வந்த போது பைப் வெடிகுண்டின் மூலம் அவரை கொல்ல முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவர். பிலால் மாலிக் எனும் இவர் மீது தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் சுவாதியை கொலை செய்தவனின் பெயரை பிலால் மாலிக் என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து பிலால் மாலிக் என்னும் பெயர் கொண்ட இந்த நபரின் புகைப்படத்தை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.

இந்த கொலைக்கு தொடர்பில்லாத ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது அவருடைய உயிருக்கு கூட ஆபத்தாக முடியலாம். எனவே இந்த பொய் புகைப்படத்தை மேலும் பரப்ப வேண்டாம் என கேடுக்கொள்கிறோம்.

சுவாதியை கொன்றவர் இவர் இல்லை: விஷத் தகவலை பரப்பும் சமூக வலைதளங்கள்



நடன நிகழ்ச்சிக்கு நடனமாட வந்த இரண்டு பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தி ஒரு கும்பல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

ஆக்ராவில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பகுதியில், ஜீன் 25ஆம் தேதி ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நடனமாடுவதற்காக மதுராவில் இருந்து கலை குழுவினர் வந்துள்ளனர். அதில் மூன்று பெண்களும் இடம் பெற்றிருந்தனர்.

அந்த நிகழ்ச்சி அன்று இரவு நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த மூன்று பெண்களையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பத்திரமாக மதுரா அழைத்துச் செல்வதாக கூறி அவர்களை ஒரு காரில் ஏற்றி புறப்பட்டனர்.

அவர்கள் சென்று கொண்டிருந்த போது, காரில் பின்னால் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் சென்று காரை மறித்துள்ளது. அதன்பின் அதில் இரு பெண்களை மட்டும் அங்கிருந்து கடத்திச் சென்று ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் ஆக்ரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், விழா ஏற்பாட்டாளர்கள் உட்பட 12 பேர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விழா ஏற்பாட்டாளர்கள் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

நடனப் பெண்களை கடத்தி 12 பேர் கற்பழித்த கொடூரம்



சந்தன கடத்தில் வீரப்பனை மையமாக வைத்து பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி தமிழில் வெளியாகியுள்ள ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற திரைப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தமிழில் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற தலைப்பில் அந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என் கணவரை பற்றி பலரும் தவறுதலாக படம் எடுக்கிறார்கள். அவரது பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதே அவர்களின் நோக்கம். முன்னாள் காவல் அதிகாரி தேவாரம் என் கணவரை பல வருடங்களாக தேடினார். அவர் புத்தகம் எழுதினால் கூட அதில் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் விஜயகுமாருக்கு என்ன தெரியும்? அவர் என் கணவரை மோரில் விஷம் வைத்து கொன்றுள்ளார். இந்த உண்மையை அவர் சொல்ல தயாரா?

என் கணவர் பற்றி விஜயகுமார் தவறான தகவல் கொடுத்து வருகிறார். ஆரம்ப காலத்தில் என் கணவர் சந்தன மரம் கடத்திய போது நான் அவருடன் இருந்தேன். எனக்கு அவரைப் பற்றி தெரியும். அவர் ஏன் தலைமறைவாக இருந்தார் என்ற உண்மைகள் விரைவில் வெளிவரும். அதுவரை பொறுத்திருங்க்கள்.

கில்லிங் வீரப்பன் என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் முற்றிலும் தவறானது. அதை யாரும் பார்க்க வேண்டாம். அதேபோல், என் கணவருக்கும் பிரபாகரனுக்கும் தொடர்பு இருப்பது போல் என்று கூறப்படுவது தவறான தகவல்” என்று அவர் கூறினார்.

வில்லாதி வில்லன் வீரப்பன் படத்தை யாரும் பார்க்காதீர்கள் : முத்துலட்சுமி அதிரடி



சென்னைய சூளைமேட்டை சேர்ந்த இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டதை நேரில் கண்ட தமிழரசன் என்பவர் பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கூறியதில் மனதை பதறச் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


வண்டலூரில் பணிபுரியும் தமிழரசன் என்பவர், தினமும் சுவாதி செல்லும் ரயிலில்தான் பயணம் செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்றைக்கும் அவர் அங்கிருந்துள்ளார்.

இவர் மூலமாகத்தான், 15 நாட்களுக்கு முன் சுவாதியை ஒரு நபர் அதே ரயில் நிலையத்தில் வைத்து கன்னத்தில் பலமுறை அடித்ததாகவும், அதற்கு சுவாதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தார் என்றும் தகவல் தெரியவந்தது.

இந்நிலையில், ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழரசன் மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் “ நான் அன்று வழக்கம் போல் ரயிலுக்காக நடை மேடையில் காத்திருந்தேன். அப்போது திடீரென உடலில் அரிவாளால் வெட்டும் போது எழும் சத்தமும், ஒரு பெண் மரண வலியில் ஓலமிடும் சத்தமும் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.

அப்போது, சுவாதி கழுத்தில் இருந்து ரத்தம் பாய்ச்சிய படி அப்படியே கீழே சாய்ந்தார். அவரது தலையும், கால்களும் மூன்று நிமிடம் அசைந்து கொண்டிருந்தது. அதன்பின் அப்படியே அசைவற்றுப் போனது. நானும் அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கிருந்த ஒரு பெண் “போயிடுச்சிப்பா” என்று கூறிய போதுதான் எனக்கு சுயநினைவு வந்தது.

அந்த பெண்ணை கொலை செய்து விட்டு தப்பி ஓடியவனின் பின்னால் இருவர் ஓடினர். அங்கிருந்த கற்களை எடுத்து அவன் மீது வீசினர். ஆனாலும், அவன் வேகமாக ஓடினான். அப்போது தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. இருந்தாலும் ரயில் வருவதற்குள் அவன் வேகமாக ஓடி தப்பிச் சென்று விட்டான்” என்று கூறியுள்ளார்.

போலீசாரின் விசாரணையில் தமிழரசனின் வாக்குமூலம் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

சுவாதியின் உடல் மூன்று நிமிடமே அசைந்தது : கொலையை நேரில் பார்த்தவர் பேட்டி



தமிழக அரசின் அனுமதி இல்லாமல், ஆந்திர அரசு அணைகளையோ கட்ட அனுமதிக்கக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் அனுமதி இல்லாமல், பாலாற்றில் ஆந்திர மாநில அரசு அணைகளையோ, தடுப்பணைகளையோ கட்டக் கூடாது. இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு, குப்பம் என்ற இடத்தில் ஆந்திர மாநில அரசு அணை கட்டும் முயற்சியில் இறங்கியது. இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையிலே உள்ளது. பாலாற்றில் அணை கட்டும் திட்டத்தையும் ஆந்திர அரசு நிறுத்தி வைத்தது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை களைக் கட்டக் கூடாது என்று ஆந்திர மாநில அரசுக்கு மத்திய அரசின் நீர்வளத் துறையும் அறிவுறுத்தியுள்ளது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், கர்நாடக அரசும் ஏற்கனவே ஏராளமான தடுப்பணைகளைக் கட்டிவிட்டதால் பாலாறு அருகிப் போய் விட்ட நிலையில், வேலுhர் மாவட்டம், வாணியம்பாடி அருகில், புல்லுhர் என்ற இடத்தில், தமிழக எல்லையில் ஐந்து அடி உயர தடுப்பணையை ஆந்திர மாநில அரசு கட்டியுள்ளது. இதற்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதா என்றும் தெரியவில்லை. தற்போது அந்தத் தடுப்பணையின் உயரத்தை 10 அடியாக உயர்த்தும் பணி, 45 இலட்சம் ரூபாய்ச் செலவில் துவக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருவதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதால், தமிழகத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலங்களில் பாசனம் பாதிக்கப்படும். மேலும் இவ்வாறு தடுப்பணை கட்டப்படுவதால், இந்து சமய அறநிலையக் கட்டுப்பாட்டின் கீழ், பாலாற்றின் கரையிலே உள்ள கனகநாச்சியம்மன் கோவில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது. பாலாற்றில் தடுப்பணையை உயர்த்தும் இந்தப் பிரச்சினையில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை கவனிக்காமல் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தியினை இன்று வெளியிட்டுள்ள "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு "Charging that this is a failure of the TN Government, Vellore farmers say that it would deprive even a mild flow of water in the river, which enters TN at Pullur Panchayat in Vellore District. A TN Government Official said that though the work had been going on for more than two months, no PWD official nor any other TN administration Official visited the Site". (இது தமிழ்நாடு அரசாங்கத்தின் தோல்வி என்று வேலூர் விவசாயிகள் குற்றஞ்சாட்டு வதோடு, தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதால் சிறிய அளவில் வந்து கொண்டிருந்த தண்ணீரும் தடைப்பட்டு விடும் என்று கூறுகிறார்கள். இரண்டு மாதங்களாக தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், தமிழகப் பொதுப்பணித் துறையின் அதிகாரிகளோ அல்லது தமிழக அரசின் பொது நிர்வாக அதிகாரிகளோ, யாரும் அந்தப் புல்லூருக்கு வந்து ஆந்திர மாநில அரசு மேற்கொண்டிருக்கும் அத்துமீறலைப் பார்த்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசின் அதிகாரி ஒருவரே கூறியதாகவும் "டைம்ஸ் ஆப் இந்தியா" எழுதியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு மீறல்கள் குறித்துத் தான் அ.தி.மு.க. அரசு அக்கறையற்ற தன்மையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது என்றால், விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் இது போன்ற பிரச்சினையிலும் கவலையற்ற போக்கிலே தான் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஜெய லலிதா இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைமைச் செயலகத்திற்கு வருவதும், காவல் துறையினர் ரோந்து செல்ல சைக்கிள்களை வழங்குவது போன்ற பணியிலே ஈடுபட்டுள்ளார். காவல் துறையினர் சைக்கிளிலே சென்று குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது என்பது தொழில் நுட்பம் இறக்கை கட்டிப் பறக்கும் இந்தக் காலத்திற்குப் பொருந்தி வருமா என்று கூடச் சிறிதும் எண்ணிப் பார்க்காமல், "கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும்" காரியத்திலே ஈடுபட்டுள்ளார்கள். ஜெயலலிதாவின் பொறுப்பிலே உள்ள காவல் துறையில் உள்ள தலைமைக் காவலர் ஒருவர் வழக்கு விசாரணையை பதிவு செய்யவே செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக் கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா எதற்கெடுத்தாலும் மற்றவர்கள் மீது குறை சொல்லித் தப்பிக்கும் போக்கினை கை விட்டு, காவேரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்கும் பிரச்சினை ஆனாலும், முல்லைப் பெரியாறு பிரச்சினை ஆனாலும், பாலாற்றுப் பிரச்சினை ஆனாலும் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தமிழகத்திலே உள்ள விவசாயிகள் நிம்மதியாக வாழ்வதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்!

என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர அரசு தடுப்பணை கட்டுகிறதாம்; தமிழகம் என்ன செய்கிறது? : கருணாநிதி கேள்வி



இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேர்தலின் போது, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வரப்படும் என்று பா.ஜ.க, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே அதற்கான சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள சாதக மற்றும் பாதகங்களை யுசிசி ஆய்வு செய்து வருகிறது.

மேலும், இதுபற்றி மத்திய சட்டதுறை அமைச்சகத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் பொதுசிவில் சட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை மக்களும், பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு முனைப்பு காட்டியிருக்கிறது தற்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் : மத்திய அரசு அதிரடி



சுவாதியின் செல்போன் ஆந்திரா மாநிலத்தில் இருப்பதாக சந்தேகப்பட்டு காவல்துறை தனிப்படை ஒன்று ஆந்திரா மாநிலத்துக்கு சென்றுள்ளது.

சுவாதியின் கொலை வழக்கில் குற்றவாளியை இன்னும் ஒரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வெரு விதமான செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது சுவாதியின் செல்போன் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகு அவரது செல்போன் சம்பவ இடத்தில் இல்லாததால், அவரது செல்போனை கொலையாளி எடுத்து சென்றிருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் சுவாதியின் நண்பர் ஒருவர் சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகு போன் செய்துள்ளார். அப்போது போனை எடுத்த நபர் பேசாமல் அழைப்பை துண்டித்துள்ளார்.

அந்த செல்போன் ஆந்திராவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காவல் துறை தனிப்படை ஒன்று குற்றவாளி ஆந்திரா மாநிலத்தில் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு ஆந்திராவுக்கு விரைந்து சென்றுள்ளது.

சுவாதியின் செல்போன் ஆந்திராவில் உள்ளதா?: தனிப்பைடையினர் விரைவு



உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கன மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று அதிகாலை, உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோராகர் மாவட்டத்தில் மேகம் வெடித்துச் சிதறி, பலத்த மழை பெய்தது. 50 கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் இரண்டு மணிநேரம் பெய்த கனமழை 100 மில்லிமீட்டர் அளவு பதிவாகியிருந்தது.

இதன் காரணமாக, சிங்காலி, பத்தாகோட், ஓக்லாம் தால் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டன. பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதேபோல் சமோலி மாவட்டத்திலும் கனமழை பெய்தது. மழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக 8 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் காணாமல் போனதாகவும் கூறப்பட்டது

இன்று மாலை நிலவரப்படி 12 பேர் பலியானதாகவும், 17 பேர் நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த இயற்கை பேரிடர் குறித்து தகவல் அறிந்ததும் டெல்லியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உத்தரகாண்ட் விரைந்துள்ளனர்.

அவர்கள் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் பெய்த பேய் மழைக்கு 12 பேர் பலி



பழனி அருகே கூடு விட்டு கூடு பாய முயற்சித்த இரண்டு இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அருகே ஆயக்குடியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்(37), ராஜ்குமார்(26). இவர்கள் இருவரும் ஆன்மீகத்தில் அதீத நாட்டமுள்ளவர்கள். இவர்கள் அடிக்கடி பொன்னிமலைக்கரடு என்ற மலைப்பகுதிக்கு சென்று தியானம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த மாதம் 29-ஆம் தேதி இவர்கள் இருவரும் தியானம் செய்ய காலையில் பொன்னிமலைக்கரடு சென்றனர். மறுநாள் வரைக்கும் இருவரும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த இரு வீட்டாரும் அவர்கள் தியானம் செய்யும் இடத்திற்கு சென்றனர்.

அங்கு சென்று பார்த்தபோது இருவரும் இறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருவரின் உடலிலும் எந்த சிறு காயமும் இல்லை. இதனையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரின் உடலையும் கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இறந்த இருவரும் அடிக்கடி கூடு விட்ட கூடு பாயும் வித்தை பழகி வருவதாகவும் இதில் தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் கூறி வந்தனர் என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்கள் கூடு விட்டு கூட பாயும் பயிற்சியில் ஈடுபட்ட போது உயிரிழந்தார்களா என காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடு விட்டு கூடு பாய முயற்சி செய்த இரு வாலிபர்கள் மர்ம மரணம்



நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கு விசாரணை பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

சுவாதியை கொலை செய்த கொலையாளி பற்றிய வீடியோ மூலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால், அதில் கொலையாளியின் முகம் தெளிவாக தெரியவில்லை. எனவே, அவனை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சுவாதி கொலை பற்றி பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. இதுபற்றி செய்தியாளர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் கருத்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர் “சுவாதி கொலை வழக்கு சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பொதுமக்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்” என்று அவர் கூறினார்.




சுவாதி கொலை வழக்கு சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது : கமிஷனர் தகவல்



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொன்றவன் யார் என கண்டுபிடிப்பதில் காவல் துறைக்கு புதிய வீடியோ ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளது.

சுவாதி படுகொலை நடந்து ஒரு வாரமாகியும் குற்றவாளியை இன்னமும் பிடிக்க முடியவில்லை. காவல் துறை பல்வேறு கோணங்களில் இந்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில் சுவாதியை கொலை செய்த குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் வீடியோ காட்சி காவல் துறையிடம் சிக்கியுள்ளது.

சந்தேகப்படும் குற்றவாளி பயன்படுத்திய இரு சக்கர வாகன எண்ணை ஆய்வு செய்து, அதன் மூலம் இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும் என்றும், விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

இந்த வீடியோ ஆதாரம் சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது. குற்றவாளியை விரைந்து பிடிக்க இது உதவும் என நம்பப்படுகிறது.

சுவாதி கொலையாளி இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற வீடியோ ஆதாரம் சிக்கியது



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ஒரு வாரமகியும் குற்றவாளியை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த வழக்கில் தினமும் பல்வேறு தகவல்கள் வந்தவாறே உள்ளன.
சுவாதி வழக்கில் இது வரையிலான நிகழ்வு:-

* சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் செங்கல்பட்டு அருகில் உள்ள இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் சுவாதி என்னும் இளம்பெண் மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.

* காலையில் ரயில் நிலையத்தில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.

* 6:30 மணியளவில் மர்மநபரால் கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடலை 8:30 மணிக்கு பின்னரே ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே காவல் துறையினர் எடுத்தனர். இடைப்பட்ட நேரத்தில் யாருமே சுவாதியை மருத்துவமனைக்கு எடுத்து சொல்லவோ கொலை செய்தவனை பிடிக்கவோ முன்வர வில்லை.

* சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் சில மணி நேரத்திலேயே தமிழகம் முழுவதும் பரவியது. தமிழகமே இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ந்தது. சுவாதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பாத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

* ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் சுவாதியை கொலை செய்தவன் யார் என்பது தெரியவில்லை.

* ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவின் மூலம் சுவாதியை கொலை செய்தவன் இவன்தான் என சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டது காவல் துறை.

* பின்னர் அதனை உறுதி செய்யும் விதமாக அந்த நபர் கொலை செய்துவிட்டு ரயில் நிலையத்தில் ஓடும் காட்சியும் பின்னர் ரயில் நிலைய சுவர் வழியா குதித்து ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும் காட்சியும் பதிவான சிசிடிவி வீடியோ வெளியானது.

* இந்த வழக்கை விசாரிக்கும் திறமை ரயில்வே போலிசாருக்கு இல்லை என்பதால், இது தமிழக காவல் துறைக்கு மாற்றப்பட்டது.

* காவல் துறை நடத்திய விசாரணையில் சுவாதி கங்கையம்மன் கோவிலுக்கு சென்றபோது ஒரு நபர் பின் தொடர்ந்து வந்து நான் யாரென்று தெரிகிறதா என கேட்டார், அதற்கு சுவாதி தெரியவில்லை என கூற, நல்லா யோசிச்சு பார் நான் யாரென்று தெரியும் என அந்த நபர் கூறியதாக இதனை பார்த்த கோயில் பூசாரி கூறியுள்ளார்.

* சுவாதியை அந்த நபர் பல நாட்களாக பின் தொடர்ந்து வந்துள்ளார். சுவாதியின் தோழியும் இரண்டு முறை அவனை பார்த்துள்ளார்.

* அவன் யாரென்றே தெரியவில்லை, என்னை பின் தொடர்ந்து வந்து நான் யாரென்று தெரிகிறதா என கேட்கிறான் என சுவாதி அவளது தோழியிடம் கூறியிருக்கிறார். சுவாதியின் தோழி இதனை இப்படியே விடக்கூடாது என எச்சரித்துள்ளார்.

* மேலும் சுவாதி, தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவதாக தனது ஆண் நண்பர் ஒருவரிடமும் கூறியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

* சுவாதியை கொலை செய்ய கொலையாளி பயன்படுத்திய அரிவாள் கோடம்பாக்கம் செல்லும் தண்டவாளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதில் கொலையாளி தனது கைரேகையை அழித்து விட்டு போட்டு சென்றுள்ளான்.

* கொலை நடந்த இடத்தில் இருந்து கொலைகாரனின் சட்டை பட்டன்கள் இரண்டு கைப்பற்றப்பட்டது.

* சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அந்த நாய் மோப்பம் பிடித்து தண்டவாளம் வழியாக கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை சென்று திரும்பியது.

* அரிவாளை கைப்பற்றிய காவல் துறை அதில் கைரேகை அழிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் கைரேகை பதிவாகியுள்ளதை வைத்து ஆதார் அட்டை மூலம் குற்றவாளி யார் என கண்டறிய முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வந்தன.

* கொலை செய்வதற்கு குற்றவாளி பயன்படுத்தியது புதிய அரிவாள். இந்த அரிவாள் கர்நாடகாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் பயன்படுத்தும் அரிவாள் என கூறப்படுகிறது.

* சுவாதி பணிக்கு சேரும் போது பெங்களூரில் அவருக்கு சில மாதங்கள் பயிற்சி கொடுக்கப்பட்டது. எனவே அங்கு ஏதாவது அவருக்கு பிரச்சனை இருந்ததா என்பதை விசாரிக்க தனிப்படை பெங்களூர் அனுப்பப்பட்டது.

* கொலை செய்தவன் சுவாதியின் செல்போனை எடுத்து சென்றுள்ளான் என்பது தெரியவந்தது. 24-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ஆன் செய்தே வைத்திருந்திருக்கிறான். பின்னர் அந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறான். சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது அவரது செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. சுவாதியின் வீடும் சூளைமேட்டில் தான் உள்ளது. சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது காட்டிய இடம் சுவாதியின் வீட்டின் அருகில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த கொலையை நேரில் பார்த்ததாக ஒய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர் பேட்டியளித்தார். அதில், பெண்ணுடன் 10 நிமிடங்களுக்கு மேல் அந்த வாலிபர் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார். அவர்களுக்குள் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. திடீரென்று அந்த வாலிபர் பையில் வைத்திருந்த அரிவாளால் அந்த பெண்ணை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். அரிவாளால் வெட்டப்பட்ட அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு நான் மேலிருந்து இறங்கி ஓடினேன். ஆனால் ஒருவர் கூட அந்த கொலையாளியை பிடிக்க முன்வரவில்லை. எல்லோரும் சேர்ந்து விரட்டியிருந்தால் அவனை பிடித்திருக்கலாம் என்று கூறினார்.

* சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை முடக்கி அதை ஆய்வு செய்ததில் சுவாதி இரண்டு பேரிடம் அதிகமாக சாட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் வரவழைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் காவல் துறையினர். அதில் ஒருவரின் தோற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள நபரின் உருவத்துடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது.

* இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த கேண்டீன் ஊழியர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சுவாதியும், அந்த கொலைகாரணும் சிறிது நேரம் கேண்டீன் அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் என்ன பேசினார்கள்? என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் காரசாரமாக சிறிது நேரம் பேசினார்கள்.

அப்போது திடீரென்று ‘அய்யோ... அம்மா...’ என்று குரல் கேட்டது. அந்த கொலைகாரன் பக்கவாட்டில் கொஞ்சம் பின்பக்கமாக நின்று அந்த பெண்ணை அரிவாளால் வெட்டினான். உடனே அந்த பெண் ரத்தம் பீறிட்ட நிலையில் அருகில் இருந்த இருக்கையில் விழுந்து, பின்னர் தரையில் சாய்ந்து விட்டார்.

சிறிது நேரம் அவர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அதிர்ச்சியில் இருந்ததால் எங்களால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே அந்த கொலைகாரன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான். அதன்பிறகு ஓடிச்சென்று பார்த்தோம். அந்த பெண் அதற்குள் இறந்துவிட்டார் என அந்த கேண்டீன் ஊழியர் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் சுவாதியை கொலை செய்தவன் என காவல் துறையினரால் சந்தேக குற்றவாளி என கூறி வெளியிடப்பட்ட நபர் தான் அது என கேண்டீன் ஊழியர் உறுதிப்படுத்தினார்.

* இந்நிலையில் சுவாதியை கொலை செய்த குற்றவாளி சென்னை திருவான்மியூரில் ஜூன் 28-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து இந்த செய்தி உண்மையல்ல எனவும், இது வெறும் வதந்தி தான் என காவல் துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் குற்றவாளியை நெருங்கிவிட்டோம், இன்னும் சில தினங்களில் பிடித்துவிடுவோம் என காவல் துறை தெரிவித்தது.

* சுவாதி பற்றிய எல்லா தகவல்களையும் கொலையாளி, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தன் நண்பர் ஒருவனுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வந்துள்ளான். அதற்கான ஆவணங்களை கைப்பற்றும் பணியிலும் காவல் துறை ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தியும் உலா வந்தது.

* மேலும் கொலையாளி சுவாதி பணிபுரிந்த அலுவலகத்துக்கு அருகில் சென்று நோட்டமிட்டதாகவும் தகவல்கள் வந்தன. சுவாதி வேலைக்கு செல்ல பரனூர் ரயில் நிலையத்தில் இறங்கிதான் செல்வார். ரயில் நிலையத்தின் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்திலும் அந்த நபர் சுவாதியை பின் தொடர்ந்துள்ளான். இரண்டு நாட்களாக அந்த நபரை அங்கே பார்த்ததாக ஆட்டோ டிரைவர்கள் கூறுகின்றனர்.

* ரயில் நிலையத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மூலம் பதிவாகிய கொலை செய்தவனின் புகைப்படம் தெளிவில்லாமல் இருந்தது. இந்நிலையில் அந்த குற்றவாளியின் புகைப்படத்தை தொழில்நுட்ப உதவியுடன் கொஞ்சம் தெளிவாக வெளியிட்டனர்.

* சுவாதி படுகொலை செய்யப்பட்ட அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு நபர் சந்தித்துப் பேசியதாகவும், அந்த நபர் சுவாதியை கன்னத்தில் சரமாறியாக அடித்ததாகவும் தமிழ்ச்செல்வன் என்ற தனியார் நிறுவன ஊழியர் கூறியுள்ளார்.

* கூட்ட நெரிசலான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொன்றவனை யாரும் துரத்தி பிடிக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால் சுவாதி படுகொலை செய்யப்பட்ட போது அங்கே 6, 7 பேர் தான் இருந்தார்கள் எனவும் கொலை செய்த அந்த வாலிபர் நடைமேடையில் வேகமாக சென்று கொண்டிருந்தார் அவரை ஒருவர் பின்னால் ஒருவர் துரத்திக்கொண்டு ஓடினார் என இதனை நேரில் பார்த்த தமிழ்ச்செல்வன் என்ற தனியார் நிறுவன ஊழியர் கூறினார்.

* இந்நிலையில் சுவாதியை கொலை செய்த குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் வீடியோ காட்சி இன்று காவல் துறையிடம் சிக்கியது. ஆனால் இந்த வீடியோ காட்சி தெளிவில்லாமல் இருப்பதால் வண்டியின் எண் தெளிவாக தெரியவில்லை. இதனால் குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

* இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க காவல் துறை 8 தனிப்படையை அமைத்தது. இந்நிலையில் கூடுதலாக மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுவாதி கொலை வழக்கில் மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கு இதுவரை...