நடனப் பெண்களை கடத்தி 12 பேர் கற்பழித்த கொடூரம்
நடன நிகழ்ச்சிக்கு நடனமாட வந்த இரண்டு பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தி ஒரு கும்பல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
ஆக்ராவில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பகுதியில், ஜீன் 25ஆம் தேதி ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நடனமாடுவதற்காக மதுராவில் இருந்து கலை குழுவினர் வந்துள்ளனர். அதில் மூன்று பெண்களும் இடம் பெற்றிருந்தனர்.
அந்த நிகழ்ச்சி அன்று இரவு நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த மூன்று பெண்களையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பத்திரமாக மதுரா அழைத்துச் செல்வதாக கூறி அவர்களை ஒரு காரில் ஏற்றி புறப்பட்டனர்.
அவர்கள் சென்று கொண்டிருந்த போது, காரில் பின்னால் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் சென்று காரை மறித்துள்ளது. அதன்பின் அதில் இரு பெண்களை மட்டும் அங்கிருந்து கடத்திச் சென்று ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் ஆக்ரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், விழா ஏற்பாட்டாளர்கள் உட்பட 12 பேர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விழா ஏற்பாட்டாளர்கள் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment