திருச்செந்தூரில் சரத்குமார் தோல்வி: கருத்துக்கணிப்பில் தகவல்
அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தோல்வியடைவார் என ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சமக தலைவர் சரத்குமார், இந்த தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
சரத்குமாரை எதிர்த்து திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் அசுர பலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியை சார்ந்தவர் என்பதால் அவருக்கான ஆதரவு அதிகமாக உள்ளது.
சரத்குமார் சென்னையை சேர்ந்தவர் என்றும், அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த ஊர்காரர் என்ற பிரச்சாரம் அங்கு முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில் 33 சதவீத மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிப்போம் எனவும், 44 சதவீத மக்கள் உதய சூரியனுக்கு வாக்களிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதே போல் திருவாடனை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் மற்றொரு நடிகரான கருணாஸ் வெற்றி வாய்ப்பு இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment