இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட பாஜக அமைச்சர் (வீடியோ)

Share this :
No comments


தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட சம்பவம் பாஜகவினரை பெரும் அதிர்ச்சி அடையவைத்தது.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தமிழிசை சவுந்தர ராஜன் பாஜக சாரப்பில் தாமரை சின்னத்தில் விருக்கம்பாக்கத்தில் போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில், அவரை ஆதரித்து, மத்திய மனிதவளமேட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் திடீரென இரட்டை விரலைக்காட்டு வாக்கு கேட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழிசை சவுந்தர ராஜன், அவரது கையை மடக்கி தாமரைக்கு கேட்குமாறு ஜாகையை மாற்றினார். இதனையடுத்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பாஜகவுக்கு வாக்கு கேட்டார்.

இது குறித்து பாஜக தரப்பில் கேட்ட போது, வட இந்தியாவில் வெற்றிக்கு குறித்து கூறும்போது இரட்டை விலை காண்பிப்பது இயற்கை. அதைத்தான் அவர் செய்தார். அதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்கின்றனர்.

No comments :

Post a Comment