விவசாய நிலம் வழியாக கெயில் ஏரிவாயு குழாய் பதிக்கவிடாமல் தடுப்பேன்: ஜெயலலிதா
கெயில் நிறுவனத்தை விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிக்கவிடாமல் தடுப்பேன் என்று தர்மபுரி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாலருமான ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் 3 ஆவது நாளான தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தர்மபுரி பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார். அப்போது இது குறித்த ஜெயலலிதா கூறியதாவது:- கெயில் குழாய் பதிப்பு பிரச்சினை பற்றியும் உண்மைகளை இங்கே விளக்கிக் கூற விரும்புகிறேன். திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். 7 மாவட்ட விவசாய நிலங்களின் ஊடே 310 கி.மீ. தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் பணிகளை கெயில் நிறுவனம் மேற்கொண்டது. விவசாயிகளின் விருப்பதிற்கு மாறாக இது செயல்படுத்தப்படுகிறது என்பதால் உயர்நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து எனது உத்தரவின்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. விவசாய விளை நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்தினை கைவிட வேண்டும் என்றும், நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், குழிகளை மூடி விவசாயிகளிடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் எனது அரசால் உத்தரவிடப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், தமிழக அரசுக்கு எதிரான உத்தரவுகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாய நிலங்களில் குழாய் பதிக்க மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு விட்டதால் தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. எனவே, 8-2-2016 அன்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். விவசாய நிலங்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பயன்பெறும் மரங்கள் உள்ளன. எனவே, 12 லட்சம் மரங்கள் நடப்பட வேண்டும். இது இயலாத காரியம். மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி கெயில் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிப்பு பணிகளை மேற்கொள்ளாதவாறு நான் நடவடிக்கை எடுப்பேன் என்று இந்த நேரத்தில் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment