26 வயதான வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது: இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி!

Share this :
No comments

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் டெய்லர், இவருக்கு வயது 26. தீவிரமான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதால் அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த வாரம் திடீரென இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது ஸ்கேன் செய்து பார்த்த போது இவருக்கு தீவிரமான இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் கட்டாயத்தில் உள்ளார். இங்கிலாந்து அணிக்காக 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற இங்கிலாந்து அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார். இது குறித்து கூறியுள்ள ஜேம்ஸ் டெய்லர் எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான வாரமாக இது இருந்தது. எனது உலகம் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் அதில் போராட தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து கூறிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இயக்குனர் அண்ட்ரூ ஸ்ட்ராஸ் திடீரென ஜேம்ஸ் டெய்லரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவது அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது என கூறியுள்ளார். மேலும் கிரிக்கெட் வாரியம் அவருக்கு உதவ தயாராக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment