நடிகர் பாண்டியராஜன் மகன் கைது
அனுமதியின்றி குட்டி விமானத்தை பறக்கவிட்டதாக நடிகர் பாண்டியராஜன் மகன் கைது செய்யப்பட்டார்.
ஆண் பாவம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பாண்டியராஜன். தொடர்ந்து மனைவி ரெடி,ஊர தெரிஞ்சிக்கிட்டேன் மற்றும் கோபாலா கோபாலா உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவருக்கு பல்லவ ராஜன், ப்ரித்வி ராஜன், பிரேமராஜன் என மூன்று மகன்கள் உண்டு. இவர்களில் ப்ரிதிவி ராஜன் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரேமராஜன் நேற்று அனுமதி இல்லாமல் குட்டி விமானத்தை பறக்கவிட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பிரேமராஜனைக் கைது செய்தனர். அவரிடமிருந்த குட்டி விமானமும் பறிமுதல் செய்தனர். பின்னர் பிரேமராஜன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment