வதந்திகளை பொய்யாக்கிய நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி

Share this :
No comments


காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்-விக்னேஷ் ஜோடி சில காரணங்களால் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

தமிழ் சினிமாவின் ஹாட் ஜோடி என்றால் நடிகை நயன்தாரா-விக்னேஷ்வரன் இருவரும்தான். ஆனால், இந்த காதல் ஜோடி குறித்து அவ்வப்போது சில கிசுகிசுக்கள் வெளிவந்த வண்னம் உள்ளது.

அதாவது, நயனுக்கு, விக்னேஷ் சிவனுடனான காதலும் தற்போது முறிந்து விட்டதாக கூறப்பட்டது. விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து விட்டதாக வந்த தகவல் பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், அந்த செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி என்று நிருபித்திருக்கிறார்கள் நயனும், விக்னேஷும். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். நயன்தாராவிற்கு மலையாள சினிமாவில் நடித்ததற்காக விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில், அவரும், அவரின் காதலர் விக்னேஷ்வரனும் ஜோடியாக இருந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

இதன் மூலம் நயன்தாரா பற்றிய கிசுகிசு முடிவுக்கு வந்துள்ளது.

No comments :

Post a Comment