Kollywood Buzz 03-07-2016 | Cinema News

Kollywood Buzz 03-07-2016 | Cinema News


Wide Angle | Epi-66 A Complete Outlook On Movies Have a look on the latest updates on the film industry of Kollywood, Bollywood and Hollywood in Wide Angle.

Wide Angle | Epi-66 A Complete Outlook On Movies



2.0 படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது செங்கோட்டை, நாடாளுமன்றம் ஆகியவற்றை கிராபிக்ஸில் உருவாக்கும் பணி நடந்து வருகிறது.

ஷங்கர் இயக்கி வரும் இந்தப் படத்தில் கெட்ட ரோபோவாக நடிக்கும் அக்ஷய் குமார் நாடாளுமன்றத்தையும், செங்கோட்டையையும் தகர்க்க முயல்வது போலவும், ரஜினி அதனை தடுத்து நிறுத்துவதாகவும் காட்சி உள்ளது.

இவ்விரு இடங்களிலும் நினைத்தது போல் படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் செங்கோட்டையையும், நாடாளுமன்றத்தையும் கிராபிக்ஸில் உருவாக்கி வருகின்றனர்.

செங்கோட்டை, நாடாளுமன்றத்தை காப்பாற்றும் ரஜினி



ஷங்கரின் 2.0 படமும், ராஜமௌலியின் பாகுபலி 2 படமும் ஒரே நாளில் வெளியாகும் என்று சில ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. ஆனால், இதில் சந்தேகமேயில்லை. இரண்டு படங்களும் ஒரே நாளில் மட்டுமல்ல ஒரே வருடத்தில்கூட வெளியாவது சந்தேகமே.

பாகுபலி இரண்டாம் பாகத்தைவிட அதிக பொருட்செலவில் 2.0 தயாராகி வருகிறது. என்றnலும் சுவாரஸியமான திரைக்கதையை எந்தப் படம் கொண்டிருக்கிறதோ அதுவே ரசிகர்களை கவரும், கல்லா கட்டும்.

பாகுபலி 2 அடுத்த வருடம் ஏப்ரல் 14 வெளியாக வாய்ப்புள்ளதாக அப்படத்தில் நடித்துவரும் ராணா கூறியுள்ளார். அன்று 2.0 படப்பிடிப்பு முடிவடைந்திருந்தால் அது பேராச்சரியம். 2017 முழுவதும் 2.0 படத்தின் வேலைகள் நடைபெறும், 2018 -இல்தான் படம் வெளியாகும் என்று படக்குழு உறுதிபட கூறியுள்ளது.

2.,0 பாகுபலி 2 மோதும் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய் மட்டுமே.

2.,0 பாகுபலி 2 மோதலா...?



Rajinikanth Surprised by S.Thanu, Producer of KABALI



Anushka Finally rejected marriage - Reason behind the reason - Latest Hot News



அவர் கையால் விருதை கொடுங்கள், நயன்தாரா ஏற்படுத்திய சலசலப்பு, முன்னணி நடிகர் கோபம்?
நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடித்த நானும் ரவுடி தான் படத்திற்காக பல விருதுகளை பெற்று வருகிறார்.இந்நிலையில் நேற்று SIIMA விருது விழாவிலும் சிறந்த நடிகை என்ற விருதை பெற்றார். அப்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கையால் இந்த விருதை பெற மறுத்த இவர், விக்னேஷ் சிவன் கையால் பெற வேண்டும் என கூறினார்.இதனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் மிகவும் கோபமடைந்து விட்டனர். இதை தொடர்ந்து கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அவர் கையால் விருதை கொடுங்கள், நயன்தாரா ஏற்படுத்திய சலசலப்பு, முன்னணி நடிகர் கோபம்?



பொதுச்சேவையை முறையாக பயன்படுத்துகிறவர்களுக்கு கபாலி படத்தின் டிக்கெட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று ஆளுநர் கூறியுள்ளார்.

நல்லவேளையாக அது தமிழ்நாட்டு ஆளுநர் கிடையாது. புதுச்சேரியிர், துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் கிரண் பேடி.

கிரண் பேடி பதவியேற்றது முதல் தனக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் மூக்கை நுழைத்து வருகிறார். அவர்தான், பொதுச்சேவையை முறையாக பயன்படுத்துகிறவர்களுக்கு கலெக்டரே கபாலி டிக்கெட்களை வழங்குவார் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன், சுத்தமான செழிப்புமிக்க புதுச்சேரி திட்டத்துக்கு சிறப்பு தூதராக இருக்க ரஜினியை கேட்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆய் போனால் கழுவ வேண்டும் என்பதையும் ரஜினி சொன்னால்தான் நாட்டு மக்கள் கேட்பார்களோ?

கபாலி டிக்கெட்கள்... அரசே இலவசமாக வழங்கும் வினோதம்


Wide Angle | Epi-65 A Complete Outlook On Movies Have a look on the latest updates on the film industry of Kollywood, Bollywood and Hollywood in Wide Angle.

Wide Angle | Epi-65 A Complete Outlook On Movies


இந்த வயலையும் விவசாயத்தையும் இப்படியே தொடருங்கள்; தயவுசெய்து விவசாய வயலில் கல்நட்டு பிளாட் போட்டு விடாதீர்கள் என்று நகைச்சுவை நடிகர் சூரி வேண்டுகோள் விடுத்தார். ‘கத்துக்குட்டி’ திரைப்படத்தின் இயக்குநர் இரா.சரவணனின் இல்லத் திருமண விழா பேராவூரணி அருகே துறவிக்காடு கிராமத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் சூரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது, “இயக்குநர் சரவணன் நினைத்திருந்தால், இந்த விழாவை சென்னையில் இதைவிட பிரம்மாண்டமாக நடத்தி இருக்க முடியும்; ஆனால், தான் பிறந்த சொந்த மண்ணில் குடும்ப விழாவை நடத்துவதுதான் சரியானது என்பதை உணர்ந்து, அவர் இந்த கிராமத்தில் இவ்வளவு மக்கள் மத்தியில் நடத்தி இருக்கிறார். இந்த வயலையும் விவசாயத்தையும் இப்படியே தொடருங்கள்; தயவுசெய்து விவசாய வயலில் கல்நட்டு பிளாட் போட்டு விடாதீர்கள். கத்துக்குட்டி படத்தை பக்கா கமர்ஷியல் படமாக செய்திருக்கலாம்; ஆனால், இயக்குநர் சரவணன் அதனை மண்ணுக்கான படமாக எடுத்தார்; மீத்தேன் திட்டத்தின் அபாயங்களை அந்தப் படத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்தினார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் வேதனை நிலை இன்றைக்கும் தொடர்கிறது; பட்டினிச் சாவுகள் இந்த மண்ணில் இனியும் தொடரக் கூடாது; விவசாயிகளுக்கு நல்வாழ்வு பிறக்க வேண்டும்; பணத்துக்காக நிலத்தை விற்கும் நிலை வரக் கூடாது; என்று விவசாயிகளின் குரலாக கத்துக்குட்டி படம் ஒலிக்கச் செய்தார்; அதனாலேயே நான் அந்தப் படத்தில் ஆர்வத்தோடு நடித்தேன்“ என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நான் இதுவரை நடித்துள்ள 60 படங்களில், தனக்குப் பிடித்த படம் என்ன? என்று என்னைத் தூக்கத்தில் எழுப்பி கேட்டால்கூட வெண்ணிலா கபடிக் குழு, கத்துக்குட்டி என்ற இரண்டு படங்களையும்தான் சொல்வேன்” என்றார்.

தயவுசெய்து விவசாய வயலை பிளாட் போட்டு விடாதீர்கள் - நடிகர் சூரி உருக்கம்


Function to be held for Pichaikaran Success


மகிழ்ச்சியில் பார்த்திபன் || Parthiepan Happy For CM jayalalitha Reply



சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு யுஎஸ்ஸில் முழுவீச்சில் நடந்து வருகிறது.

படத்தை இயக்குவதாக இருந்த ராஜீவ் குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கமலே படத்தை இயக்கி வருகிறார்.

தசாவதாரத்தில் வரும் நாயுடு கதாபாத்திரத்தைதான் இதில் கமல் செய்கிறார். அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், உதவியாளராக பிரம்மானந்தமும் நடிப்பதாக கூறப்படுகிறது.

நாயுடு கெட்டப்புடன் கமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை மாதவன் பகிர்ந்திருக்கிறார். சபாஷ் நாயுடு படத்தில் கமலின் கெட்டப் இந்தப் படத்தின் மூலம்தான் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

கெட்டப்பே பல கதைகள் சொல்லுதே பாஸ்.

இதுதான் கமலின் நாயுடு கெட்டப்



திரைப்பட நடிகர் விக்ரம் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்துடன் சம்பந்தம் வைக்க உள்ளார். விக்ரமின் மாப்பிள்ளையாகப் போகிறார் கருணாநிதியின் கொள்ளுப் பேரன் மனு ரஞ்சித்.

நடிகர் விக்ரமுக்கு துருவ் என்ற மகனும் அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். இதில் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விக்ரமுக்கு மருமகனாக வர இருப்பவர் கவின்கேர் ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித். இவர் கருணாநிதியின் கொள்ளுப் பேரனும், கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரனும் ஆவார்.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஜூலை 10-ஆம் தேதி சென்னையில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் எனவும், இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதி குடும்பத்தோடு சம்பந்தம் வைக்கும் நடிகர் விக்ரம்



Director Vasantha Balan criticizing "MODI Government" - Latest Kollywood News



Vikram Becomes DMK's Sambandhi - Vikram's Daughter Weds DMK's Manu Ranjith |


Wide Angle | Epi-64 A Complete Outlook On Movies Have a look on the latest updates on the film industry of Kollywood, Bollywood and Hollywood in Wide Angle.

Wide Angle | Epi-64 A Complete Outlook On Movies



பெண்கள் விழிப்புணர்வு நிகழச்சி ஒன்றில் பங்கேற்க நாளை சன்னி லியோன் சென்னை வருகிறார்.

சென்னையில் மழை வெயில் தாக்கத்தை குறைத்து அனைவரையும் மகிழ்வித்தது. அதையடுத்து ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஒரே நேரத்தில் மகிழ்விக்கும் வகையில் நாளை சன்னி லியோனின் வருகை அமைகிறது.

நாளை நேரு உள் விளையாடு அரங்கில் நடைப்பெற உள்ள பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க சன்னி லியோன் சென்னை வருகிறார். மேலும் இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களில் முன்னேற்றத்தைப் பற்றியது என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சன்னி லியோன் நாளை சென்னை வருகை



STR's AAA role revealed!



Ramya Krishnan to team up with Kamal after 14 years for Sabash Naidu | Hot News