திமுக ஆட்டம் காண்கிறதா?: அதிமுக நோக்கி படையெடுக்கும் அதிருப்தியாளர்கள்!
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. அதளபாதாளத்தில் இருந்த திமுக வீருகொண்டு எழுந்து வலிமையான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதனையடுத்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதியிடம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழத்தில் ஒரு ஆளும் கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் திமுகவின் முன் இருக்கும் சவால்கள் என்ன என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கருணாநிதி, திமுக எந்த சவால்களையும் சந்திக்கும். தற்போது திமுகவை விட அதிமுகவுக்கு தான் சவால்கள் அதிகம். ஒரு எம்.எல்.ஏ மறைந்த பிறகு அதிமுகவின் பலம் தற்போது 130-ஆக உள்ளது. குறைந்த பட்ச பெரும்பான்மையை விட 12 எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம்.
இந்த எம்.எல்.ஏ.க்கள் சலனப்படாமல் இருப்பதும், இவர்களைப் பத்திரமாக தங்களிடமே தக்கவைத்துக் கொள்ளுவதும் அதிமுகவின் முன்னுள்ள சவால். இது மெல்லியதோர் கயிற்றின் மீது நடப்பது போன்றது என பதில் அளித்தார்.
அதிமுகவினரை தங்கள் பக்கம் இழுப்போம் என பகிரங்கமாக கூறினார் கருணாநிதி. ஆனால் தற்போது எல்லாமே தலைகீழாக நடைபெறுகிறது. திமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிமுகவில் சேரும் படலம் ஆரம்பித்துள்ளது.
திமுகவின் மாநில மகளிரணி துணைச் செயலாளராக இருந்த ஜி.விஜயகுமாரி, மாநில பிரசாரக்குழுச் செயலாளராக இருந்த கண்மணி ஆகியோர் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளர் ஏழுமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் அதிமுகவில் இணைந்தனர்.
திமுகவில் வாரிசு அரசியல் காரணமாகவும், முக்கிய அரசியல் தலைகளின் செல்வாக்காலும் கட்சிக்கு உண்மையாக உழைத்த எங்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம், தேர்தலில் வாய்ப்பு போன்றவை கிடைக்கவில்லை என கட்சி மாறியவர்கள் கூறுகின்றனர்.
தேமுதிக போன்ற பிற கட்சியினர்கள் திமுகவில் சேர்ந்து வரும் வேளையில் சொந்த கட்சியினரே ஆளும் கட்சியான அதிமுகவில் சென்று இணைவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலிமை பொருந்திய எதிர்கட்சியாக உருவாகிய திமுகவில் இருந்த
Labels:
other
,
politics
No comments :
Post a Comment