முதலமைச்சர் வீட்டில் சோதனை - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

Share this :
No comments


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரங்கசாமி வீட்டில் பணம் மற்றும் ஏராளமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு வந்த ரகசிய புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 நிமிடம் நடைபெற்ற இந்த சோதனையில், அவரது இல்லத்தில் கார் நிறுத்துமிடம், தோட்டப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனை நடந்த போது, ரங்கசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

வாக்குப்பதிவு வருகின்ற 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments :

Post a Comment