அதிமுக அமைச்சர் மகன் மீது பரபரப்பு புகார்

Share this :
No comments


சென்னையில், வாக்கு சாவடிகளை கைப்பற்ற முயன்றதாக, அதிமுக அமைச்சர் வளர்மதி மகன் மீது, சென்னை காவல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் செல்வம் மனு அளித்துள்ளார்.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் திமுக சார்பில் கு.க.செல்வமும், அதிமுக சார்பில் அமைச்சர் வளர்மதியும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், தேர்தல் வாக்குப்திவு அன்று, அதிமுக அமைச்சர் வளர்மதி மகன் மூவேந்தன், சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 45 மற்றும் 46 ஆவது வாக்கு சாவடிகளை கைப்பற்ற முயன்றதாக சென்னை காவல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் செல்வம் மனு அளித்துள்ளார். இந்த புகார் உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

No comments :

Post a Comment