சிரஞ்சீவியின் 150 -வது படத்தில் அனுஷ்கா...?

Share this :
No comments


யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாத அளவுக்கு உறுதியாக இருக்கிறது அனுஷ்காவின் மார்க்கெட். அதிலும் தெலுங்கில் அவர்தான் சூப்பர் ஸ்டாரினி.

பாகுபலி 2 படத்தில் நடித்து வருகிறவர் சிரஞ்சீவியின் 150 -வது படத்திலும் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

தமிழில் வெளியான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். இதுதான் அவரது 150 -வது படம். இதில் சமந்தா நடித்த நாயகி வேடத்தில் அனுஷ்காவை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். கால்ஷீட் ஒத்து வந்தால் கண்டிப்பாக நடிப்பார் என ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

No comments :

Post a Comment