செயலிழந்த ஃபேஸ்புக் பக்கங்கள்: நிறுவனங்கள் தங்கள் பதிவுகளை வெளியிட முடியாமல் திணறல்

Share this :
No comments


சமூக வலைதளமான ஃபேஸ்புக் உலக அளவில் பரந்து விரிந்து தனது அதிகமான மக்களால் பயன்படுத்துகிறது. ஃபேஸ்புக்கில் உலகின் பல முக்கிய நிறுவனங்கள் தங்களுக்கென்று பிரத்தியேகமாக அதிகாரப்பூர்வமான பக்கங்களை கொண்டுள்ளது.

இந்த ஃபேஸ்பக்கங்களில் தங்களின் பதிவுகளை வெளியிடுகின்றனர். பல செய்தி நிறுவனங்கள் தகவல்களை மக்களிடையே விரைவாக கொண்டு சேர்க்க இந்த ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இன்று ஃபேஸ்புக்கில் உள்ள அனைத்து பக்கங்களும் பதிவுகள் எதுவும் இடமுடியாமல் செயல் இழந்தது.

ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட பிழை காரணமாக செய்தி நிறுவனங்கள் பதிவிட முடியமல் தவித்தனர். தற்போது ஃபேஸ்புக் மிகப்பெரிய மற்றும் முக்கியமான தகவல் தொடர்பு தளமாக இருப்பதால் அதில் சிறிய தவறு நடக்கும் போது அதன் பாதிப்புகள் மிக பெரியதாக மாறிவிடுகிறது.

இதானல் இன்று ஃபேஸ்பக்கங்களில் ஏற்பட்ட பிழை உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல முக்கிய தளங்கள் இதனால் இன்று பாதிப்புக்குள்ளாகியது. இந்த பிரச்சணை இன்று அனைத்து ஃபேஸ்புக் பக்கங்களையும் பாதித்ததாக தெரியவில்லை ஆனால் பல சுதந்திரமான ஃபேஸ்புக் பக்கங்களை இது பாதித்தது. நமது வெப்துனியாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தையும் இது பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment