மக்கள் நல கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு: திருமாவளவன் வெளியிட்டார்
கடந்த சில நாட்களாக நீடித்து வந்த தேமுதிக-மக்கள் நல கூட்டணி தொகுதிகள் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திருமாவளவன் வெளியிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் ஆர்.கே.நகர், சோழிங்கநல்லூர்,திருவள்ளூர், வேலூர், மைலம், சேலம் தெற்கு, குன்னம், புவனகிரி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், வானூர், திண்டிவனம் காட்டுமன்னார்கோவில், துறையூர், மானாமதுரை, பரமக்குடி, சோழவந்தான், வந்தவாசி, அரக்கோணம், ஊத்தங்கரை, ஆத்தூர் (சேலம்), திருவிடை மருதூர், ராசிபுரம்
Labels:
other
,
politics
No comments :
Post a Comment