பாஜக ஜெயலலிதா விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறது - விஜயகாந்த்

Share this :
No comments

பாஜக பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டி விடும் வேலையை செய்து வருகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். கரூர் மாவட்டத்தில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய விஜயகாந்த், “தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவால் நடைபெற்று வந்த மணல் கொள்ளையால் தமிழக மட்டும் அல்லாமல் இந்த நாடே சீரழிந்து விட்டது. மேலும் தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் தருமத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர் இதில் தருமம் ஜெயிக்க மக்களாகிய நீங்கள் ஆதரவு தரவேண்டும். பாஜக ஒரு பக்கம், இரண்டு மத்திய அமைச்சர்களை விட்டு, முதல்வரை பார்க்க முடியவில்லை என்று அதிமுகவை திட்டவிடுவார்கள்; மறுபக்கம் இரண்டு மத்திய அமைச்சர்களை விட்டு அதிமுகவை புகழ்ந்து பேசவைப்பார்கள். பாஜக பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டி விடும் வேலையை செய்து வருகிறது. அதிமுகவும், பாஜகவும் மக்களை ஏமாற்றிவருகிறது. திமுக, அதிமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் பொதுமக்களாகிய நீங்கள்தான் தடுக்க வேண்டும். தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

No comments :

Post a Comment