வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு

Share this :
No comments

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மே 16ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் கே.ஞானதேசிகர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மே 16ஆம் தேதி அன்று, 1881ஆம் ஆண்டின் மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் பொது விடுமுறையானது அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ அரசின் இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், விடுமுறை தினத்துக்கு ஈடாக வேறொரு தினத்தில் வேலை நாளாகவும் அறிவிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், விடுமுறை விடாத நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments :

Post a Comment