கருணாநிதி-மு.க.அழகிரி திடீர் சந்திப்பு
திமுக தலைவர் கருணாநிதியை முன்னாள் மத்திய அமைச்சரும் அவரது மகனுமான அழகிரி இன்று கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். மு.க.அழகிரி ஸ்டாலினுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் பேசி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தற்காலிகமாக நீக்கப்பட்டார். மீண்டும் அவரது விமர்சனம் தொடர்ந்ததால் நிரந்தரமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனினும் அவ்வப்போது திமுகவை விமர்சித்தும், திமுகவை விமர்சிப்பவர்களை விமர்சித்து பேசி வந்தார். சில நேரங்களில் அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்கும் முயற்சிகள் நடந்து வந்தன. திடீரென கோபாலபுரம் செல்லும் அவர் தனது தாயாரை சந்தித்துவிட்டு வருவார். ஆனால் கருணாநிதியை கடந்த மாதம் 25-ஆம் தேதி மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல்கள் வந்தன. மு.க.அழகிரியின் ஒவ்வொரு செயலும் புதிராகவே இருந்தது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டின் பின்வாசல் வழியே வந்து சந்தித்துள்ளார். இந்த முறை தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூற வந்ததாக மு.க.அழகிரி கூறியுள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அவரது இந்த சந்திப்பில் அரசியல் விவகாரம் இருக்கலாம் என பேசப்படுகிறது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment