தோனிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் சண்டை: ஜெயிப்பது யார்?

Share this :
No comments

நெருங்கி பழகிய இரு நண்பர்கள் இன்று முதன் முறையாக மோத இருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்து விளையாடிய தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்த ஐபிஎல்-இல் பலப்பரிட்சை நடத்துகிறார்கள். சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த அணியில் இருந்த வீரர்கள் திரும்ப ஏலம் விடப்பட்டனர். இதில் தோனி புனே அணியின் கேப்டனாகவும், ரெய்னா குஜராத் அணியின் கேப்டனாகவும் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த இரு அணிகளும் இன்று மோதுகின்றன. இருவரும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இந்திய அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து விளையாடியவர்கள். இதனால் இருவரின் பலம் மற்றும் பலவீனங்கள் இருவருக்கும் தெரிந்திருக்கும். இதனால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புனே அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இரு அணியும் இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பில் களம் இறங்க உள்ளது.

No comments :

Post a Comment