விஜயகாந்திற்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டம்

Share this :
No comments

தேமுதிக தலைவர் விஜயகாந்தை கண்டித்து ரஜினி ரசிகர்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி, சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய விஜயகாந்த் "ரஜினி பின்வாங்கியதை போல் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்" என்று கூறினார். அத்துடன், "ரஜினி நடித்த திரைப்படம் ஒன்றில் சில காட்சிகளை வெட்டி எடுக்கசொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் பணிந்து பின் வாங்கினார்" என்று விஜயகாந்த் பேசினார். விஜயகாந்தின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, விஜயகாந்த் பேசியதை கண்டித்தும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பூர், காங்கேயம், அவினாசி, உள்ளிட்ட பல இடங்களில் கருப்புகொடி ஏந்தி ரஜினி ரசிகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விஜயகாந்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில், காங்கேயம் பகுதியில் அனுமதியை மீறி கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்து செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment