அம்மாவின் ஆணைக்கிணங்க மழை : சேலம் கலெக்டருக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்
சேலம் கலெக்டர் சம்பத் மற்றும் வேலூர், தேனி மாவட்ட கலெக்டர்களை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தமிழகத்தில் கனமழை பெய்தது. அதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கலெக்டர் சம்பத் “அம்மாவின் ஆணைக்கிணங்க சேலத்தில் கனமழை பெய்தது” என்று உளறினார். அந்த வீடியோ வைரலாக பரவியது. சட்டசபை தேர்தல் வருவதால், ஆளும் கட்சியான அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கும் அரசு அதிகாரிகளை மாற்றம் செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் தற்போது ஈடுபட்டிருக்கிறது. ஏற்கனவே, சம்பத் உள்ளிட்ட சில முக்கிய மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்கள். எனவே, சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், வேலூர் கலெக்டர் நந்தகோபால், தேனி கலெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்துள்ளது. ஆனால், அவர்களுக்கு வேறு என்ன பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
Labels:
News
,
other
No comments :
Post a Comment