வீல் சேரில் வந்தாவது வழக்குகளை சந்திப்பேன் : விஜயகாந்த் பேச்சு
என் மீது வழக்கு தொடர்ந்தால், வீல் சேரில் வந்தாவது அந்த வழக்குகளை சந்திப்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார். தேமுதிக-மக்கள் நலக் கூட்டனி சார்பில், தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். “அன்று வெள்ளையனே வெளியேறு என்று கூறினோம். இன்று கொள்ளையனே வெளியேறு என்று கூற வேண்டிய நிலையில் இருக்கிறோம். தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போர்தான் இந்த தேர்தல். இதில், தர்மத்தை நீங்கள்தான் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஜெயலலிதா நின்று கூட பேச மாட்டர். அவரை நம்பி நாம் எப்படி ஒட்டுப் போடுவது. மக்களுக்காக நான் என்று அவர் கூறுவார். அது எதற்கு எனில், எல்லா சொத்தையும் கொள்ளை அடிச்சிட்டு போவதற்குத்தான். அதேபோல், திமுக தலைவர் கருணாநிதி மக்களிடம் பொய்களை கூறி வருகிறார். ஜெயலலிதாவிற்கு கருணாநிதியை பிடிக்காது. கருணாநிதிக்கு ஜெயலலிதாவை பிடிக்காது. அவர்கள் இருவருக்கும் விஜயகாந்தை பிடிக்காது. மு.க.ஸ்டாலின் எண்ணமும், கெட்ட நோக்கமும் அவரை அழித்து விடும். பிள்ளைப் பிடிப்பவர்களை எல்லாம் உங்கள் கட்சியில் வைத்திருக்கிறீர்கள். நான் பிரச்சாரத்திற்கு வர மாட்டேன் என்றும், என்னால் பேச முடியாது என்றும் கூறினார்கள். அதிமுக ஆட்சியில், எதை பேசினாலும் கேஸ் போடுகிறார்கள். என் மீது வழக்கு தொடரட்டும். என்னால், வர முடியாமல் போனால் கருணாநிதி மாதிரி வீல் சேரில் வந்தாவது வழக்குகளை சந்திப்பேன்” என்று பேசினார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment