குடிச்சு குரல் போனதிற்கும், குண்டடிபட்டு குரல் போனதிற்கும் வித்தியாசம் இல்லையா? - நடிகை விந்தியா கேள்வி

Share this :
No comments

குடிச்சு குடிச்சு உடம்பு கெட்டுப்போய் குரல் போனதற்கும், குண்டடிபட்டு குரல் போனதிற்கும் வித்தியாசம் இல்லையா? என்று பிரச்சாரக் கூட்டத்தில் நடிகை விந்தியா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடிகை விந்தியா ராயப்பேட்டை பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசிய விந்தியா, ”உலகத்திலேயே தமிழில் பேசுபவருக்கு சப் டைட்டில் போடுவது விஜயகாந்திற்குதான். அவர் அம்மா போல நடந்து காட்டுகிறார். அவர் நடக்க வேண்டும். ஐந்து ஒரு இடத்தில் தொடர்ந்து நிற்க முடியுமா? மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், தேமுதிக தலைவர் நடந்தால் மாலைகள் விழாது, அவரே விழுவார். அம்மாவைப் பற்றி பேசுவதற்கு முன்பாக நீங்கள் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள். குடிச்சு குடிச்சு உடம்பு கெட்டுப்போய் குரல் போனதற்கும், குண்டடிபட்டு குரல் போனதிற்கும் வித்தியாசம் இல்லையா? எம்ஜிஆர் பேசியது புரிந்ததா என்று பிரேமலதா கேட்கிறார். எவ்வளவு தைரியம் இருந்தால் கேட்பார்கள். எங்க புரட்சித் தலைவர் போட்டோ போதும் ஓட்டு வாங்க. விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்கிறார்கள். எங்க புரட்சித் தலைவர், கருணாநிதியை நாக்கு மடித்து பேசியதில்லை. ஆனால் கட்சி ஆரம்பித்த உடனேயே முதலமைச்சரானார். உங்களைப்போல நாக்கை மடித்துப் பேசி நாடாளுமன்றத் தேர்தல்போல நாசமா போகல. டெபாசிட் வாங்க திராணி இல்லாத உங்களுக்கெல்லாம் ஒரு கட்சி. ஒரு சின்னம். இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கிற போர் என்கிறார்கள். எல்லா பக்கமும், பேரம் பேசி பேரம் பேசி விலைபோகாத வேஸ்ட் பீஸ் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஆதரவு இல்லாதவங்க அனாதை ஆசிரமம் ஆரம்பித்த மாதிரி ஒரு கூட்டணி ஆரம்பித்திருக்கிறார்கள். அதை வச்சிக்கிட்டு ஆட்சியை பிடிப்பார்களாம். பல் இல்லாதவன் பஞ்சு மிட்டாய்க்கு ஆசப்படலாம். பட்டானிக்கு ஆசைப்படக்கூடாது” என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment