காசி தியேட்டர் அருகில் மீண்டும் ஒரு காரில் தீ பற்றியது : தொடரும் விபத்துகள்
சென்னை சாலையில் செல்லும் கார்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. நேற்று காலை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் சென்ற கார் திடீரென தீ பற்றியது. அந்த கார் விமானநிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நான்கு பெண்கள் அந்த காரில் இருந்தனர். காரில் புகை வந்தவுடன், டிரைவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டார். அதன் அந்த வண்டி கொளுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்நிலையில், மீண்டும் இன்று அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று காலை சென்னையில் உள்ள காசி தியேட்டர் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த காரில் தீ பிடித்தது. இதையடுத்து, டிரைவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டார். காரில் இறந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி விட்டதால் உயிர்பலி ஏதுமில்லை. காரில் பற்றிய தீ, தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment