வாட்ஸ் ஆப்பில் சிக்கிய சார்பதிவாளர்: ஆப்பு வைக்க தயாராகும் பதிவாளர்
உடுமலை சார்பதிவாளர் அலுவலக சார்பதிவாளராக இருப்பவர் வசுந்தரா தேவி, இவர் லஞ்சம் வாங்குவது போல் விடியோ வாட்ஸ் ஆப்பில் பரவி வந்தது. இதனால் தற்போது இவர் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
சார்பதிவாளர் வசுந்தரா தேவி பொதுமக்களிடம் பணம் வாங்கி ரசீதில் குறித்தது போன்ற வீடியோ ஒன்று சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவியது. இது குறித்து தகவல் கிடைத்ததும், திருப்பூர் மாவட்ட பதிவாளர் சாமிநாதன் உடனடியாக விசாரணையில் இறங்கினார்.
சம்பந்தப்பட்ட உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற சாமிநாதன் அங்கு வசுந்தரா தேவியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஊழியர்கள் மற்றும் பத்திர எழுத்தர்களிடமும் தனித்தனியே வசுந்தரா தேவியின் குறித்து விசாரணை நடத்தினார்.
பல மணி நேரம் நீடித்த இந்த விசாரணைக்கு பின்னர் பதிவாளர் சாமிநாதன் சார்பதிவாளர் வசுந்தரா தேவி பணம் வாங்கியது குறித்து அறிக்கை தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினார். இந்த அறிக்கையின் மீது உயர் அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment