"அப்பா வயதை தப்பாக சொன்ன மகன்" - சத்தம் போட்டு சிரித்த ஜெயலலிதா

Share this :
No comments


தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதியின் வயதை அவரது மகனும், எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் தப்பாக குறிப்பிட்டார். அதைக் கேட்டு முதல்வர் ஜெயலலிதா கொஞ்சம் சத்தமாகவே சிரித்தேவிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனால், சபாநாயகரை அவரது இருக்கையில் அமரச்செய்யும் வாய்ப்பு, திமுக சட்டமன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தது.

திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியின் 63ஆவது பிறந்த தினம் என்று சொன்னார். அப்போது நேர்எதிரில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதியின் வயதைக் கேட்டதும் கொஞ்சம் பலமாகவே சிரித்துவிட்டார்.

பேச்சை முடித்துவிட்டு உட்கார்ந்த மு.க.ஸ்டாலினிடம் இது பற்றி திமுக எம்எல்ஏக்கள் எடுத்து சொல்லவே மீண்டும் எழுந்து சபாநாயகரின் அனுமதியைப் பெற்று கருணாநிதியின் வயதை 93 என்று பதிவு செய்தார்.

No comments :

Post a Comment