தந்தை மறைவால் பட வெளியீட்டை தள்ளி வைத்த சந்தானம்
நடிகர் சந்தானத்தின் தந்தை சென்ற வாரம் திடீரென்று மரணமடைந்தார்.
இந்த எதிர்பாராத இழப்பு காரணமாக தனது தில்லுக்கு துட்டு படத்தின் இசை மற்றும் பட வெளியீட்டை சந்தானம் மாற்றி வைத்துள்ளார்.
லொள்ளு சபா ராம்பாலா இயக்க சந்தானம் நாயகனாக தில்லுக்கு துட்டு படத்தில் நடித்துள்ளார். முதல் காப்பி அடிப்படையில் சந்தானம் படத்தை தயாரித்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸுக்கு தருவதாக ஒப்பந்தம். தமன் இசையமைத்துள்ளார்.
பேய் படமான இதனை ஜுலை 1 -ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தனர். தந்தையின் மறைவால் படத்தை இடை வெளியீடு மற்றும் பட வெளியீட்டை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார் சந்தானம்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment