மதன் விவகாரத்தில் பொங்கி எழுந்த பாரிவேந்தர்

Share this :
No comments


எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார். இதனால் அவரை கண்டுபிடித்துதரக் கோரி அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் காவல்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்தனர். போலீஸாரின் தொடர்தேடுதல் வேட்டையில் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. வேந்தர் மூவிஸ் மதன் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் மிகவும் மர்மமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பணமோசடி விவகாரத்தில் மதன் குறித்து அதிகமான புகார்கள் காவல்துறையினரிடம் குவிகின்றனவாம். குறிப்பாக எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ப்லரிடம் கோடிக்கணக்கான பணம் வசூல் செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தில் எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பாரிவேந்தர் எந்த பதிலும் கூறாமல் இருந்தார். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் எஸ்.ஆர்.எம் குறித்து சில குற்றச்சட்டுகளை கூறினார். குறிப்பாக பாரிவேந்தர் குறித்து அதில் கூறினார். இதற்கு பாரிவேந்தரும் பதிலடி கொடுத்தார்.

இருவருக்குமான அறிக்கை போர் உச்சகட்டத்தை அடைந்த இந்த நிலையில் எஸ்.ஆர்.எம். குழும பெயரை பயன்படுத்தி மதன் பண மோசடி செய்துள்ளார் என்ரும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அவர் சார்பாக அளித்துள்ள புகார் மனுவில், எஸ்.ஆர்.எம். பெயரை பயன்படுத்தி மதன் பல கோடி பணமோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment