இறைவி படவிழாவில் பெண் தொகுப்பாளரை அவமானப்படுத்திய ராதாரவி
இறைவி படத்தின் இசை வெளியீடு விழாவில் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் நிஷாவை நடிகர் ராதாரவி அவமானப்படுத்தியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இறைவி படத்தின் இசை வெளியீடு விழாவில் நிஷா என்பவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். நிகழ்ச்சியின் போது திரைப்படத்தில் நடித்தவர்கள் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, இந்த பொண்ணுக்கு ராதாரவி யாருன்னு தெரியல, இந்த கருமத்த கூட்டிவந்து நிகழ்ச்சி பண்றாங்க. அழகு மட்டும் இருந்தா போதாது அறிவும் வேணும் என்று கூறியுள்ளார்.
இறைவி என்பது பெண் கடவுளை குறிக்கும் சொல், இறைவி திரைப்படம் பெண்களின் மதிப்பை குறித்து பேசும் படம் என்பது ப்ரோமோ பாடல் மூலம் தெரிய வருகிறது. இந்நிலையில் ராதாரவி அந்த இடத்தில் அப்படி குறிப்பிட்டது மிகவும் அவமானமாக கருதப்படுகிறது.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment