ரூ.251 ஸ்மார்ட்போன் 28ஆம் தேதி முதல் விநியோகம்
மத்திய அரசு ஆதரவுடன், ரிக்கிங் பெல்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பிரீடம் 251 ஸ்மார்ட்போன் வருகிற 28ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரிங்கிக் பெல்ஸ் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் ‘பிரீடம் 251’ என்ற பெயரில் ரூ.251 க்கு ஸ்மார்ட்போனை வழங்குவதாக அறிவித்தது. அதை வாங்க விரும்புகிறவர்கள் இணையதளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.
இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு விண்ணப்பித்தனர். ஆனால், இது தொடர்பாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஏராளமான பேருக்கு செலுத்திய பணத்தை திருப்பி அளித்தது ரிக்கிங் பெல்ஸ் நிறுவனம். மத்திய அரசின் விசாரனை வட்டத்தில் இந்நிறுவனம் உள்ளது.
இதுவரை 7 கோடி பேர் கேஷ் ஆன் டெலிவரி வகையிலும், 30 ஆயிரம் பேர் பணம் கொடுத்தும் முன்பதிவு செய்துள்ளனர். எனவே வருகிற 28ஆம் தேதி முதல் கட்டமாக, முதலில் முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்மார்ட்போன் விநியோகிக்கப்படும் என்று ரிக்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment