வேந்தர் மூவிஸ் மதனை தேடும் பணியில் லாரன்ஸ்
காசியில் சமாதியாகிறேன் என்று பிரபல தயாரிப்பாளர் வேந்தர் மூவிஸ் மதன் எழுதியுள்ள கடிதத்தை அடுத்து அவரை தேடும் பணியில் நடிகர் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார்.
பிரபல வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன். இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை 15 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாயும்புலி உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நிறுவனம் சார்பாக வெளியிட்ட படங்கள் பெரிதாக வரவேற்பில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தில் தவித்து வந்தார் மதன்.
இந்நிலையில் கடந்த ஞ்சாயிறு அன்று மதன் தான் கங்கையில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு மாயமானார். வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் பாரிவேந்தர் மீதான தனது மரியாதையையும், சிலர் பரப்பிய அவதூறு காரணமாக அவர் மதனை புறக்கணிப்பதையும், பல கோடிகள் பாரிவேந்தருக்கு உதவி செய்ததையும் மதன் குறிப்பிட்டுள்ளார். இனியொரு ஜென்மமே வேண்டாம் என்று காசியில் சமாதியாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மதனை தேடும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வாரனாசி சென்றுள்ளனர். இதில் நடிகர் ராகவா லாரன்ஸூம் வாரனாசி சென்றுள்ளனர். லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை தயாரிப்பவர் மதன் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment