பிரபாகரன் மரணிக்கவில்லை: இலங்கை அமைச்சர் பரபரப்பு பேட்டி
இலங்கை துணை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசுடன் நடைப்பெற்ற கடைசி போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக, அந்நாட்டு ராணுவம் பிரபாகரனின் சடலத்தை ஊடகங்களில் வெளியிட்டது. ஆனால் இலங்கை அரசை தவிர வேறு யாரும் இன்று வரை பிரபாகரன் இறந்து விட்டதாக கூறவில்லை. பிரபாகரனின் விவகாரம் மட்டும் இன்றும் மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், பிரபாகரன் மீது உள்ள வழக்கை முடிக்க, இந்திய அரசு இலங்கை அரசிடம் பிரபாகரனின் மரண சான்றிதழ் கோரியது. அதற்கு இலங்கை அரசு இன்றுவரை கொடுக்கவில்லை.
இந்நிலையில் இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த துணை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சிங்கள பத்திரிக்கை ஒன்றில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படுவதை நான் நம்பவில்லை. எத்தனையோ பேருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல பிரபாகரனின் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால்தான் நான் நம்ப முடியும், என்றார்.
அவருடைய இத்தகைய பேட்டி இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இத்தகைய கருத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று இலங்கை பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment