அமைச்சர் மீது செருப்புகளை வீசிய பொதுமக்கள்; அதிர்ந்த அதிமுகவினர்

Share this :
No comments


அமைச்சர் பழனியப்பன் வாக்கு சேகரிக்க சென்றபோது, அவர் மீது பொதுமக்கள் செருப்புகள் வீசிய சம்பவம் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் பழனியப்பன். இவர் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அமைச்சர் பழனியப்பன் பாப்பிரெட்டிபட்டியை அடுத்த நத்தமேடு பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றனர். அதற்கு முன்னதாக அங்கு கூடியிருந்த ஊர் பொதுமக்கள், அமைச்சர் வாக்கு கேட்டு ஊருக்குள் வரக்கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர். இதனை பார்த்ததும் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால், ஊர் பொதுமக்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் பழனியப்பன் காரில் வந்திறங்கினார். அமைச்சரைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அமைச்சரின் காரை நோக்கி கையிலிருந்த பொருட்களை வீசினர்.

அதில் செருப்புகளும் சில பறந்தன. ஆனால், அவர் மீது படாதவாறு அதிமுகவினர் காருக்குள் பத்திரமாக ஏற்றினர். பொதுமக்கள் பொருட்களை வீசியதில் ஒரு கார் மற்றும் பிரசார வேனின் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து பழனியப்பன் அங்கிருந்து கிளம்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments :

Post a Comment