'ரெஸ்ட்' மோடில் இருக்கும் நாம் 'சிட்டி ரோபோ' மோடுக்கு மாறி வேலை பார்ப்பதே அரிது. கரெக்டாய் அந்த சமயத்தில்தான் சிஸ்டம் 'மழைக்கால நிர்வாகம்' போல ஸ்லோவாகி நம் உயிரை வாங்கும். அப்படி சிக்கி முக்கி திக்கித் திணறும் லேப்டாப்பை வேகமாக்கும் சின்ன சின்ன விஷயங்கள்தான் இவை.
தேவையில்லாததை வெளியேற்றுங்கள்
மொபைல் போலவே சிஸ்டமிலும் நாம் பயன்படுத்தாத ப்ரோக்ராம்கள் நிறைய இருக்கும். அவற்றை வைத்துக் கொண்டே இருக்காமல் அவ்வப்போது அன்-இன்ஸ்டால் செய்துவிடுவது நலம்.
கூகுளை லைட்வெயிட் ஆக்குங்கள்
கூகுளில்தான் முக்கால்வாசி நேரம் குடும்பமே நடத்துகிறோம். அதனால் cookies, cache போன்ற தேவையற்ற குப்பைகள் எக்கச்சக்கமாய் சேரும். எனவே அவற்றை அவ்வப்போது செட்டிங்களில் க்ளீன் செய்துவிடுங்கள்.
ஸ்டோரேஜ் டிவைஸ்களை பயன்படுத்துங்கள்
எந்த மெஷினாய் இருந்தாலும் அதிக லோடு ஏற்றினால் முனகவே செய்யும். எனவே அதிக டேட்டாவை ஸ்டோர் செய்து வைக்காமல் பென்ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்ற ஸ்டோரேஜ் டிவைஸ்களுக்கு அவற்றை ஷிப்ட் செய்யுங்கள்.
ஸ்டார்ட் அப் ப்ரோக்ராம்களை நிறுத்துங்கள்
ஒவ்வொரு தடவை நீங்கள் லேப்டாப்பை ஆன் செய்யும்போதும் சில ப்ரோக்ராம்களும் தன்னிச்சையாய் ஆன் ஆகி பின்னணியில் ஓடிக்கொண்டே இருக்கும். System configuration menu சென்று அத்தகைய ஸ்டார்ட் அப் ப்ரோக்ராம்களில் உங்களுக்கு தேவை இல்லாததை டிஸேபிள் செய்யுங்கள்.
இவருக்கு பதில் அவர்
நம் டிவி சீரியல்களில் இனி அவருக்கு பதில் இவர் என வருமே. அதேபோல தான். சில ப்ரோக்ராம்கள் அநியாயத்திற்கு சிஸ்டமை டயர்டாக்கும். அவற்றுக்கு பதில் வேறு ப்ரோக்ராம்களை பயன்படுத்தலாம். உதாரணமாக கூகுளுக்கு பதில் ஃபயர்பாக்ஸ், போட்டோஷாப்பிற்கு பதில் GIMP.
Optimization Tools பயன்படுத்துங்கள்
மால்வேர், ஆட்வேர்களை தவிர்க்க சில டூல்களை பயன்படுத்தலாம். நல்ல உதாரணம் CCleaner. அதைப் போன்ற டூல்கள் ஸ்பீடுக்கு கியாரண்டி.
அனிமேஷன்களை ஆப் செய்யுங்கள்
மேலே சொன்னவை பலன் தராவிட்டால் இதை முயற்சி செய்யுங்கள். அனிமேஷன்களை ஆப் செய்தால் சிஸ்டம் கண்டிப்பாய் வேகமெடுக்கும். என்ன, நீங்கள் கற்காலத்தில் உட்கார்ந்து கணினி நோண்டுவதை போன்ற பீல் வருவதை தவிர்க்க முடியாது.
Reset/Reinstall
கடைசி பிரம்மாஸ்திரம் இது. எந்த ட்ரிக்குமே பயன் தராவிட்டால் இதைக் கையில் எடுங்கள். சிஸ்டமை ரீசெட் செய்யுங்கள். அல்லது விண்டோஸை ரீஇன்ஸ்டால் செய்யுங்கள்.
No comments :
Post a Comment