கருணாநிதி 93 வயதில் 39 வயது இளைஞர் போல் செயல்படுகிறார்: ஸ்டாலின்

Share this :
No comments


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி தனது 93 வயதிலும் 39 வயது இளைஞரை போல் செயல்படுகிறார் என கூறியுள்ளார்.

செய்தி வலைதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், இந்த தேர்தல் திமுகவிற்கும் அதிமுகவுக்கு இடையேயான போட்டியாகும். இதில் மூன்றாவது, நான்காவது அணிகளுக்கு எல்லாம் இடமில்லை என்றார்.

மேலும் தமிழகத்தை ஒரு இளைஞர் ஆட்சி செய்யவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், திமுக வெற்றி பெற்றால் கருணாநிதிதான் முதல்வர் ஆவார் என்றார். கருணாநிதி தனது 93 வயதிலும் 39 வயது இளைஞர் போல் செயல்பட்டு வருகிறார் என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

No comments :

Post a Comment