தமிழக தேர்தல்: 141 தொகுதிகளை கைப்பற்றுகிறது திமுக கூட்டணி

Share this :
No comments


தமிழக சட்ட மன்றத் தேர்தலில் 141 தொகுதிகளை திமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என நியூஸ் 7 தொலைக்காட்சி மற்றும் தினமலர் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.


தமிழக சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு, நியூஸ் 7 தொலைக்காட்சி மற்றும் தினமலர் நாளிதழ் 234 தொகுதிகளிலும் பிரமாண்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.

இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி, 141 தொகுதிகளை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி கைப்பற்றி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா கூட்டணி ஒரு தொகுதியிலும், பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, 234 தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் மட்டும், இழுபறி நிலை நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment