நான் ஓட்டுப் போட மாட்டேன் : கமல்ஹாசன் அதிரடி

Share this :
No comments


நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் நான் ஓட்டு போடப்போவதில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தான் அடுத்து நடிக்கவுள்ள சபாஷ் நாயுடு பட வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

எனது அடுத்த படமான சபாஷ் நாயுடு படப்பிடிப்பு மே 16ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த தேர்தலில் நான் வாக்களிக்கப் போவதில்லை. ஏனெனில், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் என் ஓட்டை யாரோ போட்டு விட்டார்கள். இந்த முறை என் பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

இத்தனைக்கு தேர்தல் கமிஷன் அதிகாரி என் நெருங்கிய நண்பர். இருந்தும் என்ன செய்வது?” என்று பேசினார்.

No comments :

Post a Comment