பறவை மோதி பள்ளம் ஆன விமானம் : அவசரமாக தரையிறக்கம்

Share this :
No comments


அமெரிக்க எர்லைன்ஸ் விமானம் மீது பறவை மோதி விமானத்தில் முன் பகுதியில் பள்ளம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் இருந்து டெல்லாஸ் நகரத்திற்கு சென்ற ஒரு விமானம், மேலே எழும்பும் போது சில பறவைகள் விமானத்தின் முன்பகுதியில் மோதியது.

இதனால், அந்த விமானத்தை இயக்கிய விமானி, விமானத்தை உடனே தரையிறக்க வேண்டும் என்று, விமான கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு கூறினார்.

அதன்பின் அந்த விமானம் சியாட்டில் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த விமானத்தை பரிசோதித்தபோது, பறவை மோதிய இடத்தில் ஒரு பெரிய பள்ளம் உருவாகியிருந்தது தெரிய வந்தது. அந்த இடத்தில்தான் விமானத்தின் காலநிலை ரேடார் இருக்கிறது.

ஆனால், பறவை மோதியதில் விமானத்திற்கோ அல்லது பயணிகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. எனவே விமானம் கிளம்பி செல்ல, அதிகாரிகள் உத்தரவு அளித்தனர். எனவே மீண்டும் விமானம் கிளம்பிச் சென்றது.

No comments :

Post a Comment