நடுரோட்டில் காரை நிறுத்திய ஜெயலலிதா: யாருக்காக தெரியுமா? (வீடியோ இணைப்பு)

Share this :
No comments


தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற வழியில் நடுரோட்டில் காரை நிறுத்தி முஸ்லிம்கள் சிலரை சந்தித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா விமான நிலையம் செல்லும் வழியில் கோட்டூர்புரம் பாலம் அருகே சென்ற போது அங்கு முஸ்லீம் பெண்கள் உள்ளிட்ட 75 பேர் நின்றதை பார்த்துள்ளார். உடனே காரை நிறுத்தியிருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் கார் அவர்கள் அருகே நின்றதும், நடிகர் பஷீர் என்ற விஜய் கார்த்திக் மற்றும் வேளச்சேரி பள்ளிவாசலை சேர்ந்த அபு ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் அருகே சென்றனர்.


ஜெயலலிதாவை சந்தித்த விஜய்கார்த்திக், அவருக்கு முஸ்லிம்களின் புனித நூலான குரானை பரிசாக கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட ஜெயலலிதா, 'இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்' என்றார்.

No comments :

Post a Comment