மியான்மரில் நிலநடுக்கம்: அசாமில் 2 பேர் பலி

Share this :
No comments

மியான்மரின் தலைநகருக்கு வடக்கே முக்கியமான நகரான மண்டேலாவுக்கு அருகே நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏதும் ஏற்படவில்லை என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அசாமில் உணரப்பட்டது. அங்கு இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலியாகி உள்ளனர். 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தகவல் தொடர்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. ரயில் போக்குவரத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே வீடுகளில் வெடிப்பும், கட்டிடங்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அங்கு பீதியாகவே உள்ளனர். திடீர் நிலடுக்கத்தில் இருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. அச்ச உணர்வுடனையே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் மியான்மர் தலைநகருக்கு வடக்கே 396 கிலோமீட்டர் தொலைவில், மியான்மரின் முக்கிய நகரமான மண்டேலாவுக்கு வடமேற்கே 227 கிலோமீட்டர் தொலைவில் காப்பு பகுதியில் ஏற்பட்டது.

No comments :

Post a Comment