வைகோ தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் : திருமா கோரிக்கை

Share this :
No comments


வருகிற சட்டமன்ற தேர்தலில், வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரெனெ தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிய வைகோ, கோவில்பட்டி தொகுதியில் விநாயக் ரமேஷ் என்பவை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தார்.

இது அவரது கூட்டணி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய வைகோ, தனக்கு எதிராக நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் என திமுக பரப்புரை செய்து வருகிறது. சாதி மோதலை உருவாக்க திமுக திட்டமிட்டிருக்கிறது. நான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டால் சாதி மோதல் உருவாக வாய்ப்பிருப்பதால் நான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என கூறினார்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தை திருமாவளவன் “ வைகோவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அவர் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

No comments :

Post a Comment