வைகோவுக்கு கருப்புக் கொடி காட்டிய நடிகர் கருணாஸ் டீம் : மதுரையில் பரபரப்பு

Share this :
No comments


கோவில்பட்டியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு, நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கருப்புக் கொடி காட்டிய விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று கோவில்பட்டியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக வைகோ சென்றார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் முழக்கங்களை எழுப்பினார்கள். அதன்பின், போலிசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

இன்று மீண்டும் வைகோ கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தை சேர்ந்த சிலர் அவருக்கு கருப்பு கொடி காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதன்பின் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

உடுமலைப் பேட்டையில் நடந்த ஜாதிக் கொலையை வைகோ கண்டித்தார். அப்போதும் அவருக்கு எதிராக அகில இந்திய தேவர் இன மக்கள் கூட்டமைப்பினர் கருப்புக் கொடி காட்டினர். தற்போது வைகோ செல்லும் இடமெங்கும் கருப்பு கொடி காட்டி வருகின்றனர்.

இதற்கு முன்பு வைகோ கோவில்பட்டி பகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று அந்த தொகுதிக்கு வேறு ஒருவரை திடீரென வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தார்.

அதன்பின் பேசிய வைகோ, கோவில்பட்டி தொகுதியில் ஜாதியின் பேரில், கலவரங்களை ஏற்படுத்த திமுக முயல்வதால் நான் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment