முன் விரோதம் காரணமாக, ஒரு வக்கீல் தனது காரை ஒரு ஹோட்டலுக்குள் ஓட்டிய பரபரப்பு வீடியோ வெளியாகியிருக்கிறது.
மதுரையில் எஸ்.எஸ்.காலனி பகுதியில் வசிப்பர் ஹரிஹரசுதன். இவர் கௌரி கிருஷ்ணா என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். இவருக்கும் கார்மேகம் என்ற வக்கீலுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
நேற்று திடீரெனெ, கார்மேகம் ஒரு காரை எடுத்துக் கொண்டு, ஹோட்டல் இருக்கும் பகுதிக்கு வந்தார். முதலில் கல்லை எடுத்து ஹோட்டலின் மீது எறிந்தார். அதன்பின், ஹோட்டலை நோக்கி வேகமாக காரை ஒட்டினார்.
இதை கவனித்த அங்கிருந்த பொதுமக்கள், அவரை தடுக்க முயன்றனர். ஆனால், அவர் தனது காரை வேகமாக ஓட்டி நேராக ஹோட்டலின் நுழைவாயிலில் உள்ளே புகுந்து விட்டார். இதில், ஹோட்டலின் கண்ணாடிகள் இடிந்து விழுந்தது. அங்கிருந்த பொருட்கள் சேதமடைந்தது.
அதன்பின் கையில் ஒரு ஆயுதத்தோடு கீழே இறங்கிய அவர், ஹோட்டலின் வெளியே வந்து அங்கிருந்த பொதுமக்களை தாக்க முயன்றார். ஆனால், பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன்பின், அவரை போலீசார் வந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பட்டப்பகலில் பொதுமக்களை பயமுறுத்தும் விதமாக, அந்த நபர் காரை ஒட்டி ஹோட்டலுக்குள் நுழைந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments :
Post a Comment