வயதாவதை தள்ளிப்போடும் இந்த உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

Share this :
No comments

வயதாவதை தடுக்க முடியாதுதான். ஆனால் தள்ளிப் போடச் செய்யலாம் அல்லவா. நாம் சரிவிகித சத்துக்களுடன் உண்ணும்போது, நம் உடலில் தேவையான விட்டமின்களும், மினரல்களும் இருந்தால், முதுமையை தடுக்கலாம். எப்படி எந்த வகையான உணவு என்று பாக்கலாம்.

ஆன்டி ஆக்ஸிடென்ட் தேநீர் : க்ரீன் டீ மற்றும் மூலிகைகளால் செய்யப்படும் தேநீரை அருந்தினால் நிச்சயம் இளமையாக வாழலாம். அவற்றில் பாலிஃபீனால் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ளது. இவை செல்கள் பாதிப்படைவதை தடுக்கின்றன. வயது ஆக ஆக, செல் வளர்ச்சி குறைந்து பாதிப்படையும். அதனை தடுத்து இளமையை பாதுகாக்கும்.

மீன் : மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது இதயத்தில் கெட்ட கொழுப்பினை தங்க விடாமல் செய்கிறது. மேலும், உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடென்ட்டும் தருகிறது. வேண்டாத நச்சுக்கள் வெளியேறி சருமம் இளமையாக வைத்திருக்கும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், இளமையாக இருக்கலாம்.

காய்கறிகள் : கீரை வகைகள், கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், ஆகியவைகளில் ஃப்ளேவினாய்ட், விட்டமின் ஏ, மற்றும் நார்சத்துக்கள் அதிகம் உள்ளவை. இவை இளமையை தக்கவைக்கும். முகம் முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது. தினமும் இவற்றினை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்பைருலினா: ஸ்பைருலினா ஒரு கடல் வகை உணவு. இதில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது உடல் முதிர்வடைவதை எதிர்த்து, இளமையை தக்க வைக்கிறது.

பெர்ரி பழ வகைகள் : பெர்ரி பழ வகைகளில் சக்தி வாய்ந்த ஏந்தோ-சயனின் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. மேலும் என்றும் இளமையை கொண்டாடும் வகையில் நிறைய சத்துக்களை கொண்டுள்ளது. புற்று நோயையும் தடுக்கிறது.

மஞ்சள் : தினமும் சமையலில் மஞ்சள் சேர்த்துக் கொண்டு வந்தால், உடலில் நச்சுக்கள் வெளியேறும். இவை நம் இளமையை நீட்டிக்கச் செய்யும்.

லெமன் டீ : லெமன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் விட்டமின் சி உள்ளது. இவை சுருக்கங்களை போக்கச் செய்யும். இளமையாக வாழ்வத்ற்கு தினமும் லெமன் டீ பருகிப் பாருங்கள்.

செர்ரி ஷேக் : இந்த ஷேக் சருமத்திற்கு போஷாக்கு அளிக்கும் டோனராகும். தினமும் குடித்து வந்தால் சருமம் மினுமினுக்கும்.

தேவையானவை :

தேங்காய் பால் -1 கப்

ஆளிவிதை எண்ணெய் - 2 டீ ஸ்பூன்

செர்ரி பழங்கள் - 1 கப்

பசலைக் கீரை - 2-3 கப்

வாழைப் பழம் - பாதி அளவு

மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதில் ஐஸ் கட்டி துண்டுகள் ஒன்றிரண்டு போட்டு குடித்தால் அருமையான எனர்ஜி கிடைக்கும். சத்துக்கள் உடனடியாக உறிஞ்சப்படும்.

பப்பாளி கேரட் ஷேக் : பப்பாளியில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. விட்டமின் ஏ வும் உள்ளது. இவை சருமத்திற்கும் டோனராக செயல்படுகிறது. சுருக்கங்களை போக்கும்.

தேவையானவை :

பப்பாளி - 3 துண்டுகள்

கேரட் - 3 துண்டுகள்

இஞ்சி - சிறிய துண்டு

மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது பப்பாளி கேரட் ஷேக் தயார். தினமும் குடித்துப் பாருங்கள். ஒரே மாதத்தில் வித்யாசம் காணலாம்.

பச்சை காய்கறி ஜூஸ் :

தேவையானவை :

பசலைக் கீரை - 6 கப்

ஆப்பிள் - 1

வாழைப்பழம் - 1

எலுமிச்சை சாறு- 1 டீ ஸ்பூன்

நீர் - ஒன்றரை கப்

மேலே கூறிய காய்கறிகளையும் பழங்களையும் சிறிது சிறிது துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து பருகுங்கள். உடலுக்கு மிக நல்லது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். இளமையை எப்போதும் தக்க வைக்கலாம். மேலே கூறிய அனைத்து குறிப்புகளுமே ஆரோக்கியமான உணவுகள்தான்.

உடலுக்கு எந்த பக்க விளைவினையும் தராது. முதுமையை வரவிடாமல் தடுக்க ஆன்டி ஆஜிங் க்ரீம்களை வாங்கி போடுவதை விட உடலுக்குள்ளும், வெளியேவும் அற்புதம் செய்யும் இந்த ஆரோக்யமான பழச்சாறுகளையும் உணவுகளையும் உண்ணுங்கள். விரைவில் மாற்றம் காண்பீர்கள்.

No comments :

Post a Comment