எல்லா காலங்களிலுமே கூந்தல் உதிரத்தான் செய்யும். கூந்தலில் அழுக்குகள் சேராமல், நல்ல சத்துள்ள உணவுகளை உண்டு, வாரம் 3 முறை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் தலைக்கு குளித்து வந்தாலே கூந்தல் பிரச்சனைகள் வராது. இங்கு ஒவ்வொரு கூந்தலுக்கும் ஏற்ற வகையில் தீர்வுகளைக் காண்போம்.

எல்லா காலங்களிலுமே கூந்தல் உதிரத்தான் செய்யும். கூந்தலில் அழுக்குகள் சேராமல், நல்ல சத்துள்ள உணவுகளை உண்டு, வாரம் 3 முறை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் தலைக்கு குளித்து வந்தாலே கூந்தல் பிரச்சனைகள் வராது. இங்கு ஒவ்வொரு கூந்தலுக்கும் ஏற்ற வகையில் தீர்வுகளைக் காண்போம். வறட்சியான தலை முடிக்கு : கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயுடன், தேன், முட்டையை கலந்து தலையில் வேர்பகுதிகளிலிருந்து நுனி வரை தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை ஷாம்பு போட்டு அலசினால் கூந்தல் பஞ்சு போல் மென்மையாக இருக்கும். எண்ணய் பிசுபிசுப்பான கூந்தலுக்கு : சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும். இளநரை நீங்க : நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம். நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும். பொடுகு நீங்க : வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம். வேப்பம்பூ 50 கிராம் வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும். முடி உதிர்தல் பிரச்சனையா? வெந்தயத்தை ஊறவைத்து மறு நாள் அதனை அரைத்து, தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தலையை நன்றாக தேய்த்து அலச வேண்டும். ஷாம்பு, சீகைக்காய் தேவையில்லை. ஏனெனில் இதுவே நுரையை தரும். அழுக்குகளை நீக்கிவிடும். 15 நாட்களுக்கு தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்தால், தலை முடி செழித்து வளரும்

கூந்தல் உதிர்வா? அடர்த்தி இல்லையா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க


வெப்பமண்டல பகுதிகளில் வசிப்போருக்கு தோல் நோய்கள் அதிகம் ஏற்படும். அப்படி ஏற்படும் தோல் நோய்களில் ஒன்று தான் வெள்ளைத் திட்டுக்கள் அல்லது தேமல். இது பெரியவர் முதல் சிறியவர் வரை யாரையும் தாக்கலாம்.

இருப்பினும் இளம்பருவத்தினருக்கே தேமல் அதிகம் வருகிறது. இந்த தேமல் மார்பு, முதுகு, கழுத்து, கை, கால், முகம் போன்ற இடங்களில் வெள்ளை நிற வட்ட திட்டுக்கள் போன்று காணப்படும்.

இந்த பிரச்சனை அதிகமாக வியர்பவர்களுக்கும், ஸ்டெராய்டு மாத்திரைகளை பல நாட்களாக எடுத்து வருபவர்களுக்கும், நோயெதிர்ப்பு சக்தி, வைட்டமின் பி12 குறைவாக இருப்பவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் அடிக்கடி வரும்.

இந்த தேமல் பிரச்சனைக்கு என்ன தான் கடைகளில் மருந்துகள் விற்கப்பட்டாலும், சில இயற்கை வைத்தியங்களும் உள்ளன. இப்போது இந்த தேமல் பிரச்சனைக்கான சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம்.

துளசி துளசி இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம் அந்த வெள்ளைத் திட்டுக்கள் மறையும்.

வேப்பிலை மற்றும் தேன் ஒரு கப் நீரில் வேப்பிலைகளை சிறிது போட்டு நன்கு கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் தடுக்கப்படும். மேலும் வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், வெள்ளை திட்டுக்கள் நீங்கும்.

ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பி12 கிடைக்கும். இல்லாவிட்டால் ஆப்பிள் தோலை பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், வெள்ளை திட்டுக்கள் குணமாக்கப்படும்.

தயிர் மற்றும் மஞ்சள் தயிரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து, வேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்த நீரால் கழுவ வேண்டும். இதன் மூலம் வெள்ளை திட்டுக்களைப் போக்கலாம்.

புளி கொட்டை மற்றும் ஆலிவ் ஆயில் புளி கொட்டையை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 2-3 மணிநேரம் ஊற வைத்து, சாதாரண நீரில் அல்லது வேப்பிலை நீரில் கழுவ, நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி சாறு மற்றும் கற்றாழை 1 டீஸ்பூன் இஞ்சி சாற்றியில் 5-6 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, வெள்ளை திட்டுக்கள் வேகமாக மறையும்.

ஊதா நிற முட்டைக்கோஸ் ஊதா நிற முட்டைக்கோஸை சிறிது அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்து வந்தால், சீக்கிரம் வெள்ளைத் திட்டுக்களை மறைவதைக் காணலாம்.

தேமலைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!



குளிர்கால பருவ நிலை வந்தால் கிருமிகளுக்கு கொண்டாட்டம்தான். இவைகள் இந்த ஈரப்பத்தில்தான் பெருகும். நோய்களை அதிக அளவு உற்பத்தி செய்யும். காய்ச்சல், ஜலதோஷம், அஜீரணம், குமட்டல் ஆகியவை குளிர் மற்றும் மழைக் காலங்களில் தாக்கும் பொதுவான பிரச்சனைகள். நம் உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தாலும், இவற்றின் ஆதிக்கத்தை தவிர்க்க இயலாது. அவ்வாறு வரும் சிறு சிறு நோய்களுக்கும் ஆன்டிபயாடிக் சாப்பிட்டு, உங்கள் வெள்ளை அணுக்களை சோம்பேறி செய்து விட வேண்டாம். பிற்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, முழுமையாக ஆன்டிபயாடிக் நம்பியே இருக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுவிடும். ஆகவே நோய்கள் வந்தால் இயற்கையான வழிகளில் நாம் என்ன செய்ய வேண்டும் என காண்போம்.

ஜலதோஷம் காய்ச்சல் ; இது எல்லாருக்கும் வரக் கூடிய சாதரணம நோய், தினமும் பாலில், மிளகுத் தூள் மற்றும் மஞ்சளை சேர்த்து குடிக்க வேண்டும். முதலில் உங்களுக்கு அதன் பலன் முழுமையாக இல்லாவிட்டாலும், நாளடைவில் எதிர்ப்பு திறன் அதிகரித்து, விரைவில் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் விலகும். சுடு நீரில் மஞ்சள் கலந்து ஆவி பிடித்தாலும் நல்ல பலன் தரும்.

நெஞ்செரிச்சல் : குளிர்காலத்தில் ஜீரண என்சைம்கள் சரியாக வேலை செய்யாததால், அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படும். அப்போது இஞ்சிச் சாறு அல்லது எலுமிச்சை சாறு குடித்தால் அற்புதமான பலனைத் தரும். பழங்கால மருத்துவ முறை இது.

வயிற்று வலி : வயிற்று வலி ஏற்பட , சூடு, கிருமித் தொற்று, அல்லது வாய்வு , என காரணம் எதுவாகவும் இருக்கலாம். அப்போது, திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், வயிற்று வலி சரியாகும். மேலும் நிறைய நீர் குடிக்கவும். பழங்கள் சாப்பிடவும். ஏனெனில் மலச்சிக்கலாலும் வலி உண்டாகலாம்.
முகப்பருக்கள் : முகப்பருக்கள் குளிர்காலத்திலும் பாக்டீரியாக்களின் தொற்றுக்களால் ஏற்படும். அந்த சமயங்களில் எண்ணெய் பதார்த்தங்கள், சூடு தரும் உணவுகளைத் தவிர்க்கவும். வேப்பிலையை அரைத்து முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் போட்டால் அவை இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிடும்.

குளிர்கால நோய்களிடமிருந்து உங்களை எப்படி காத்துக் கொள்வீர்கள்

பூசணிக்காயில் நிறைய நீர்சத்துக்கள் உள்ளது. அதிலுள்ள நீர்சத்தும், கொழுப்புகளை குறைக்கும். 

பூசணிக்காய் சருமத்திற்கும் மிக நல்லது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் சரும பளபளப்பிற்கு ஏற்றது. 

பூசணிக்காயை கொண்டு எவ்வாறு சருமத்தில் அழகூட்டலாம் என பார்க்கலாம். ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ற வகையில் பூசணிக்காயை உபயோகப்படுத்தலாம். 

உங்களுக்கு வறண்ட அல்லது எண்ணெய் சருமம் அல்லது சென்ஸிடிவ் சருமமாக இருந்தாலும், இந்த ஃபேஸியல் பேக் மிகவும் உபயோகமானதாக இருக்கும். 

பூசணியின் சதைப்பகுதி - அரைக் கப் தேன் - அரை ஸ்பூன் பால் - கால் டீஸ்பூன் பட்டைப் பொடி - சிறிதளவு பூசணியின் சதைப்பகுதியை மசித்து, அதனுடம் மற்ற பொருட்களை சேர்த்து, முகத்தில் தேயுங்கள். 

20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், சருமம் பளபளப்பாக இருக்கும். சுருக்கங்கள் போய்விடும். வாரம் இருமுறை இதை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். பூசணியின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் சர்க்கரை, கலந்து முகத்தில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் கழுவிவிடவும். 

இது வறண்ட சருமத்தில் ஈரப்பதம் அளித்து, மென்மையாக்கும். பூசணியின் சதைப்பகுதியுடன், சிறிது எலுமிச்சை சாறு, ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து, முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்த பின் 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். 

இவை எண்ணெய் சருமத்தில் அமில காரத் தன்மையை சமன் செய்யும். பூசணி முகப்பருக்களை விரட்டும் தன்மை கொண்டது. பூசணி சதைப்பகுதியுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, கலக்கவும். 

இவற்றை முகத்தில் போட்டு காய்ந்தவுடன் கழுவுங்கள். வாரம் 3 முறை இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்


இளமையாக இருப்பது, இதய மற்றும் சர்க்கரை வியாதி தொடர்பாக எவ்வளவோ ஆராய்ச்சி நடக்கின்றது. 

வெளிப்புறமாக எப்படி ஊசி மற்றும் அறுவை சிகைச்சையின் மூலமாக இளமையாக இருக்கலாம் என நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கிறதே தவிர உணவு கட்டுப்பாட்டின் மூலமாகவும், ஆரோக்கியமான உணவுமுறைகளாலும் எப்படி இளமையை காக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளது.

உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கி இளமையாக இருந்தால், வெளிப்புறத்திலும் அவை பிரதிபலிக்கும்.

அவ்வகையில் நல்ல உணவுப்பழக்கங்களாலும், வால் நட் போன்ற பருப்புவகைகளை சாப்பிட்டால் உள்ளுறுப்புகளில் பாதிப்பு இல்லாமல் இளமையை காக்கலாம் என அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம் செய்த புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

30 வருடங்களாக ஆய்வு : கடந்த 30 வருடங்களாக நடந்த ஆய்வில்சுமார் 54, 762 பேர் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அதில் தெரியவந்துள்ளது என்ன்வென்றால் வாரம் அரைகப் அளவு வால் நட் உண்டவர்களின் உறுப்புகள் இளமையாகவும், எந்தவித பழுதும் ஏற்படாமல் இருக்கிறது என ஆய்வு கூறுகின்றது.

நட்ஸ் வகைகளில் வால் நட் மிகச் சிறந்த பண்புகளை கொண்டு தனித்துவம் வாய்ந்தது. அதில், உடலுக்கு அதிக நன்மையை தரும் நிறைவுறா கொழுப்பு அமிலங்களான ALA மற்றும் ஒமேகா 3 அமினோ அமிலங்கள் உள்ளன.

இதில் ALA மிகவும் தனித்துவம் வாய்ந்த கொழுப்பு அமிலம். அதை மற்ற நட்ஸ் வகைகளில் இல்லை. வால் நட்டிலிருந்து மட்டுமே பெற முடியும். இவை இதயத்தை பாதுகாக்க அதி முக்கியமானது.

அதே போல் அதிக அள்வு பழங்களும், காய்கறிகளும் சாப்பிட வேண்டும். குறைவான இனிப்பு வகை பானங்கள் , குறைந்த சோடியம் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றை கடைப்பிடித்தாலே இளமையாக இருக்கலாம்.

பழவகைகளில் ஆரஞ்சு, ஆரஞ்சு சாறு, ஆப்பிள், ஆகியவை இளமையாக இருக்க வைக்கும் பழங்கள் என ஆராய்ச்சியாளர் ஃப்ரான்ஸைன் கூறுகின்றார். 

ஆய்வின் முடிவில் தெரிய வந்தது யாதெனில் தனிப்பட்ட ஒருவரின் உணவுப் பழக்கங்களே நிரந்தரமான இளமையை தரும். அறுவை சிகிச்சை மற்றும் ஊசி மூலம் இளமையை தற்காலிகமாக மட்டுமே பெற முடியும் என கூறுகின்றார் ஆய்வாளர்.

வால் நட் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாமா? ஒரு ஆய்வு


ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .

வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபிள்ளை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச.பளபளக்கும் உங்கள் கூந்தல்
ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரை கலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டி கொள்ளவும்.
15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேண் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும்.
இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேண் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல் .
முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.

இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு.தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .

அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .

சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும்.

முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

கறிவேபிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்

கூந்தலை பராமரிக்க..


சரும பிரச்சனை வந்தால், மக்கள் உடனே க்ரீம்கள் அல்லது லோசன்களைக் கொண்டு சரிசெய்ய முயல்வார்கள். இருப்பினும் அடிக்கடி அவற்றைப் பயன்படுத்தும் போது அவை பிரச்சனைகளைப் போக்குமே தவிர, அரிப்பு அல்லது எரிச்சல் போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

ஆனால் இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயற்சித்தால், அதனால் பக்கவிளைவுகள் ஏதும் நேராது, மாறாக சருமத்தின் ஆரோக்கியமும் பொலிவும் தான் மேம்படும். அந்த வகையில் சரும சுருக்கம், தழும்புகள், முகப்பரு, சரும கருமை போன்றவற்றைப் போக்க ஓர் அற்புதமான ஃபேஸ் மாஸ்க் உள்ளது.

ஃபேஸ் மாஸ்க்கின் நன்மைகள் இந்த ஃபேஸ் மாஸ்க்கை அடிக்கடி போட்டு வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் இருக்கும். இந்த மாஸ்க் அதிக மருந்துவ குணம் நிறைந்த இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனால் கிடைக்கும் நன்மைகள் நிரந்தரமானதாக இருக்கும்.

தேன் இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள தேன் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும் இது சருமத்தில் ஈரப்பசையைத் தக்க வைத்து, சருமத்தை மென்மையாக்கும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சையில் இருக்கும் ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் இருக்கும் கருமை மற்றும் தழும்புகளைப் போக்கும். மேலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு எலுமிச்சை மிகவும் சிறப்பான ஓர் அழகு பராமரிப்பு பொருளாகும்.

மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள்:

தேன் - 1 டீஸ்பூன்

பட்டைத் தூள் - 1/2 டீஸ்பூன்

ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை முகத்தில் தடவும் போது கண்களின் மேல் தடவுவதைத் தவிர்க்கவும்.

சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு... ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், எலுமிச்சை சாற்றினை சேர்க்காமல் இருக்கலாம் அல்லது தேனை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எலுமிச்சை சாறு சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.

பயன்படுத்தக்கூடாதவர்கள் இரத்த நாளம் சம்பந்தமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள், இந்த மாஸ்க்கைப் போட வேண்டாம். ஏனெனில் தேன் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். வேண்டுமானால், இந்த மாஸ்க்கில் தேனிற்கு பதிலாக வெள்ளை அல்லது க்ரீன் க்ளே பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு இந்த மாஸ்க்கை முகத்தில் தடவிய பின் சிறிது எரிச்சலை உண்டாக்குவது போல் இருக்கும். ஆனால் சிறிது நேரத்தில் அது போய்விடும். மேலும் வாரத்திற்கு ஒருமுறை இந்த மாஸ்க்கைப் போட்டு வந்தால், சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.












முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளைப் போக்கும் அற்புத ஃபேஸ் பேக் பற்றி தெரியுமா?


முப்பது வயதுகளில்தான் சுருக்கங்களும், சருமம் தொய்வடைவதும், கண்களுக்கு அடியில் பை தொங்குவதும் ஆரம்பிக்கும்.

அதனை அதனை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் எளிதில் முதுமை தோற்றம் வராது. முன்பு போலில்லாமல் முப்பது வயதுகளிலும் பெண்கள் இருபது வயது போலத்தான் தோற்றம் கொண்டுள்ளனர்.

உதற்கு காரணம் சரும பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வே காரணம். நல்ல ஆரோக்கியமான உணவுடன், அழகையும் பராமரித்துவந்தால் இளமையாக இருக்கலாம்.

இளமையாக இருப்பவர்களிடன் போய் சோதித்துப் பாருங்கள். அவர்கள் நிறைய நீர் குடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். 

ஒருவகையில் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களும், இறந்த செல்களுமே வயதான தோற்றத்தை தரும். அவற்றை தினமும் வெளியேற்றிவிட்டால் சருமம் இளமையாகவே இருக்கும்.

வீட்டிலேயே இயற்கை முறையில் பப்பாளி, முட்டை, தேன் என பயன்படுத்தினால் சருமத்தில் சுருக்கங்கள் இல்லாமல், இறுக்கமான சருமத்தைப் பெற்று தொய்வடைவதிலிருந்து பாதுகாக்க முடியும். வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இதனை செய்தால் போதும்.

சர்க்கரை, கடலை மாவு, பயிற்றம் மாவு போன்ற இயற்கையான ஸ்கர்ப்பினால் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுங்கள். இவை சருமத்தை முதிர்ச்சி அடையாமல் காக்கும்.

என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்துதான் உறுப்புக்கள் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் இருக்கும். 

ஆகவே இரண்டு வகையிலும் பயன் தரும் சருமத்தை ஆரோக்கியமான உணவினாலும் உங்கள் அழகை வெளிக் கொண்டு வர முடியும். ஆகவே நல்ல உணவுகள் உடற்பயிற்சியை தவறாமல் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிக்கும் முதுமை அடையச் செய்யும். ஆகவே சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே போக வேண்டாம். இயற்கையான ஹெர்பல் சன் ஸ்க்ரீன் லோஷன் நல்லது.

இரவுகளில் சருமத்திற்கு போஷாக்கு தரும் க்ரீம்களை தடவலாம். க்ரீம்தான் தடவ வேண்டுமென்பது இல்லை. ஆலிவ் எண்ணெய், பால் க்ரீம், தேங்காய் என்ணெய் ஆகியவற்றை தடவினால் இரவில் வெகு நேரம் எண்ணெய் சருமத்தில் ஊடுருவி, மெருகூட்டும்

முப்பதுகளில் சருமத்தில் வறட்சி தோன்ற ஆரம்பிக்கும். ஆகவே சருமம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். நிறைய நீர் குடித்தும் மாய்ஸ்ரைசரை உபயோகித்தும் சருமத்தில் வறட்சி ஏற்படுத்தாமல் காத்திட வேண்டுவது முக்கியம். 

வீட்டில் இருக்கும், பால், தேன், பாதாம் ஆகியவை சருமத்திற்கு போஷாக்கு அளித்து, ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

முப்பது வயதிற்கு மேல் இளமையாக இருக்க டிப்ஸ்


உங்கள் உடலில் ஒன்றிற்கு மேற்பட்ட தழும்புகள் உள்ளதா?அறுவை சிகிச்சையால் அல்லது, விழுந்த வந்த காயத்தினால் எதுவாய் இருந்தாலும் அது அழகை பாதிக்கும் என்பது உண்மையே.

தழும்பை மறைக்க எத்தனையோ மேக்கப் அல்லது உடைகளைக் கொண்டு மறைக்க நினைத்திருக்கிறீர்களா? ஆனால் அது நிரந்தர தீர்வல்ல.

தழும்பு என்பது காயம்பட்ட இடங்களில், தோலானது தனக்கு தானே ரிப்பேர் செய்து கொள்ளும். அங்கு அதிக அளவு கொலாஜன் உற்பத்தியாகி தழும்பை விட்டுச் செல்கிறது. தழும்புகளை நீக்க இப்போது எத்தனையோ வழிகள் வந்துள்ளன.

லேசர் முறையில் தழும்பை அகற்றலாம். காஸ்ட்லியான க்ரீம்களும் வந்துள்ளன. ஆனால் அவை விலைஅதிகம் என்பதோடு, பக்க விளைவுகளையும் தரும். நீங்கள் இயற்கை முறையில் தழும்புகளை நீக்க முயற்சித்திருக்கிறீர்களா? இல்லையெனில் இதை முயற்சித்துப் பாருங்கள்.

தேவையானவை :

சந்தனம் - 1 டேபிள் ஸ்பூன்

தேயிலை மர எண்ணெய் - 1 டீ ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

மேலே கூறிய பொருட்கள் இயற்கையான முறையில் தழும்பு இருக்கும் இடத்தில் புதிய செல்களை உருவாக்குகின்றன. கொலாஜன் இழைகளை விடுவிக்கின்றன. இதனால் தழும்பு மெல்ல மறையும்.

எலுமிச்சை சாறில் இயற்கையான ப்ளீச் செய்யும் ஆற்றல் உள்ளதால் அது சருமத்தை இன்னும் மென்மையாக்கி, தழும்பை லேசாக்கும்.

செய்முறை : சந்தனம், தேயிலை மர எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளுங்கள்.

இதனை தழும்பு உள்ள இடத்தில் போட்டு, 15 நிமிடங்கள் காயவிடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனை இரவில் தூங்குவதற்கு முன் தழும்பில் போட்டுக் கொள்ளலாம். மறு நாள் காலையில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்தால், நாளடைவில் தழும்பு மறைந்துவிடும். முயன்று பாருங்கள்.

தழும்புகள் மறைய ஒரு பவர்ஃபுல்லான வழி!


தேங்காய் எண்ணெயை கூந்தலின் வளர்ச்சிக்கும், மென்மையான சருமத்திற்கும் பயன்படுத்துகிறோம்.

தேங்காய் எண்ணெய் சரும சுருக்கம், முகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகிறது. 

தினமும் வெளியே தூசி படிந்த காற்று, மாசில் நம் சருமத்தில் அழுக்குகள் சேர்ந்திருக்கும். சோப்புகள் உபயோகித்தாலும், அவற்றில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யும் இந்த ஃபேஸ் வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. 

அவை சருமத்தி முகப்பருவை உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும். அதற்கு தேவையானவை என்னெவென்று பாக்கலாம்.

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்

தேயிலை மர எண்ணெய் - 3 துளிகள்

லாவெண்டர் எண்ணெய் - 3 துளிகள்

தேன் - 2 டீஸ்பூன்

மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். 

முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.

முகத்தை கழுவிய பின்னர் பார்த்தால் உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.

சரும சுருக்கத்தை போக்கும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்


சரும வகைகளிலேயே எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் ஏராளமான சரும பிரச்சனைகள் வரும். அப்படி எண்ணெய் பசை சருமத்தினர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் முகத்தில் மேடு பள்ளங்களாக இருப்பது. இது சருமத் துளைகள் திறக்கப்பட்டு, மீண்டும் மூடாமல் இருப்பதால் ஏற்படுவதாகும்.

சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை குறைக்க சில இயற்கை வழிகள்!!! இப்படி ஒருவரது முகத்தில் மேடு பள்ளங்கள் இருந்தால், அது அவரது முக அழகையே கெடுத்துவிடும். மேலும் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க என்ன தான் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தினாலும், அது தற்காலிகமே தவிர நிரந்தரம் அல்ல என்பதை மறவாதீர்கள்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிட வேண்டியவைகள் மற்றும் சாப்பிடக்கூடாதவைகள்! முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை மறைக்க ஒரு பொருள் உதவும்.

அது தான் எலுமிச்சை. எனவே இங்கு தமிழ் போல்ட் ஸ்கை முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை மறைக்க உதவும் எலுமிச்சையைக் கொண்டு எப்படியெல்லாம் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம் என கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள்.

ஃபேஸ் பேக் #1 சிறிது வெள்ளரிக்காயை எடுத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்து வர முகத்தில் இருக்கும் குழிகள் மறையும்.

ஃபேஸ் பேக் #2 2 முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை நீக்கப்படுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.

ஃபேஸ் பேக் #3 தக்காளி சாற்றில், 2-4 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை நீக்கப்பட்டு, சருமத் துளைகள் அடைக்கப்பட்டு சுருக்கப்படும்.

ஃபேஸ் பேக் #4 சிறிது பாதாமை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #5 பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் 1/2 கப் அன்னாசி சாறு சேர்த்து கலந்து, காட்டன் துணியை அந்த கலவையில் நனைத்து முகத்தின் மேல் வைத்து 5 நிமிடம் கழித்து, முகத்தில் நீரில் கழுவ வேண்டும். இதனால் அன்னாசியில் உள்ள நொதிகள் சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்துளைகளை இறுக்கவும் செய்யும்.

ஃபேஸ் பேக் #6 இந்த ஃபேஸ் பேக்கில் எலுமிச்சை சாறு தேவையில்லை. ஏனெனில் இதில் அதற்கு இணையான பேக்கிங் சோடா உள்ளது. இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.






முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை வேகமாக மறைப்பது எப்படி?


ஆறடி கூந்தல் பெண்களுக்கு அழகு. ஆனால் இப்போதெல்லாம் ஒரு அடிக் கூட வளரவில்லை என்று புலம்புவர்கள் ஏராளம். காரணம் மாசுப்பட்ட சுற்றுச் சூழ் நிலை, நீர், உணவு, மன அழுத்தம், கெமிக்கல் கலந்த ஷாம்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.

முந்தைய தலைமுறை போல பராமரிப்பது இப்போது குறைவாகிவிட்டது. அடர்த்தி குறைந்து, நரை முடி அதிகரித்து, வறண்ட கூந்தலாகி போக சரியான பராமரிப்பே இல்லாதது காரணம். கூந்தல் வேகமாக வளர என்னென்ன செய்ய வேண்டும் என இங்கே குறிப்பிட்டுள்ளது. பாருங்கள்.

கூந்தல் ட்ரிம் செய்ய வேண்டும் : அதிகப்படியான மாசினாலும் ,கடினத்தன்மை கொண்ட நீரினாலும், கூந்தலின் நுனி வறண்டு பிளவு படும். பின்னர் வேகமாய் முடி உதிர்ந்துவிடும். இதுவே கூந்தல் அடர்த்தியில்லாமல் போவதற்கு காரணம். 6 மாதங்களுக்கு ஒரு முறை கூந்தலின் நுனியை ட்ரிம் செய்தால் முடி உதிர்தலை தடுக்கலாம்.

சீப்பினால் அழுந்த சீவுங்கள் : தினமும் இரு வேளை சீப்பினால் ஸ்காலிப்பில் அழுந்த சீவ வேண்டும். இது கூந்தலின் வேரிலுள்ள செல்களை தூண்டும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

புதிதான மயிர்கால்கள் வளரும். அதேபோல் கூந்தல் ஈரமாக இருக்கும்போது, வலுவிழந்து இருக்கும். அந்த சமயங்களில் சீப்பினால் வாரக்கூடாது. இதனால் கூந்தல் வேகமாய் உதிரும்.

சத்து நிறைந்த உணவு சாப்பிட வேண்டும் : சரியான நேரத்திற்கு எல்லா ஊட்டச் சத்தும் நிறைந்த உணவினை சாப்பிட வேண்டும். புரொட்டின் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் கூந்தலுக்கு போஷாக்கு வேகமாய் கிடைக்கும்.

ஹேர் ட்ரையர் உபயோகிப்பது கூடாது : அதிக வெப்பம் தரும் ஹேர் ட்ரையர் கூந்தலை வேகமாக பலமிழக்கச் செய்யும். கூந்தல் உதிரும். இயற்கை முறையில் கூந்தலை காய வைப்பதே நல்லது.

நிறைய நீர் குடிக்க வேண்டும் : உடலில் நீர்சத்து குறைவாக இருக்கும்போது, கூந்தல் உதிரும். தேவையான அளவு நீர் குடித்தால், கூந்தலை பாதுகாக்கும் எண்ணெய் சுரப்பி நன்றாக வேலை செய்யும். இதனால் தொற்றுக்கள் கூந்தலில் ஏற்படாமல் இருக்கும்.

கூந்தலுக்கு போஷாக்கு : கூந்தலுக்கு தேவையான சம சத்துக் கொண்ட உணவினை உண்பது போல, வெளியிருந்தும் போஷாக்கினை தர வேண்டும். முட்டை, தேன், பால் தயிர் ஆகியவை கூந்தலுக்கு வளம் சேர்ப்பவை. இவற்றை வாரம் ஒரு முறை உபயோகித்தால் மின்னும் கூந்தல் கிடைக்கும்.

ஆயில் மசாஜ் :

இது மிகவும் முக்கியம். வாரம் இருமுறை எண்ணெயால் மசாஜ் செய்வதால் கூந்தலின் வேர்க்கால்கள் தூண்டப்படுகின்றன. ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை தலைபகுதியில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, கூந்தல் வளர உதவிபுரிகின்றன.


கூந்தல் வேகமாய் வளர என்ன செய்ய வேண்டும்??


நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும்.

மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும்.

சருமத்தை க்ரீம்கள் போட்டு, மென்மையாக்க முயலாதீர்கள். அவை நல்ல விளைவுகளை தருபவை அல்ல. உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு உங்களை தேவதையாக மாற்ற முயற்சிக்கலாம்.

அவகாடோவின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடல் யோகர்ட் கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

இவ்விரண்டிலும் விட்டமின் ஈ உள்ளது. சருமத்தில் சுருக்கங்களை போக்கும். மென்மையாக சருமத்தை வைத்திடும். இதை வாரம் 3 முறை செய்யலாம்.

வாழைப்பழம், யோகார்ட், தேன் இந்த மூன்றுமே சருமத்தில் அழகினை கொண்டு வந்து சேர்க்கும் கலையை பெற்றிருக்கின்றன. மூன்றையும் கலந்து முகத்தில் பேக் போட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். குழந்தையின் சருமத்தை போன்றே மென்மையாக அப்போதே உணர்வீர்கள்.

வாழைப்பழம் கொலாஜன் உற்பத்தியை சருமத்தில் தூண்டும். இவை சருமத்தில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி, மென்மையாக்கிவிடுகிறது. சருமம் பூசியது போல் காண்பிக்கும்.

பப்பாளிப்பழத்தில் விட்டமின் ஏ, சி மற்றும் ஃபைடோ நியூட்ரியன்ஸ் உள்ளது. இது சருமத்தின் பாதிப்புகளை சரிபடுத்துகிறது. முதுமை அடைவதை தள்ளிப்போடச் செய்யும்.

பப்பாளிப்பழத்தின் சதைப்பகுதியை மசித்து, சருமத்தில் போட்டு சிறிது நேரம் மசாஸ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். மிக மென்மையான சருமத்தை பெறுவீர்கள்.

சருமத்தை மென்மையாக்கும் பழங்கள்


இளமையாக இருப்பது, இதய மற்றும் சர்க்கரை வியாதி தொடர்பாக எவ்வளவோ ஆராய்ச்சி நடக்கின்றது. வெளிப்புறமாக எப்படி ஊசி மற்றும் அறுவை சிகைச்சையின் மூலமாக இளமையாக இருக்கலாம் என நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கிறதே தவிர உணவு கட்டுப்பாட்டின் மூலமாகவும், ஆரோக்கியமான உணவுமுறைகளாலும் எப்படி இளமையை காக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளது. உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கி இளமையாக இருந்தால், வெளிப்புறத்திலும் அவை பிரதிபலிக்கும். அவ்வகையில் நல்ல உணவுப்பழக்கங்களாலும், வால் நட் போன்ற பருப்புவகைகளை சாப்பிட்டால் உள்ளுறுப்புகளில் பாதிப்பு இல்லாமல் இளமையை காக்கலாம் என அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம் செய்த புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 30 வருடங்களாக ஆய்வு : கடந்த 30 வருடங்களாக நடந்த ஆய்வில்சுமார் 54, 762 பேர் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அதில் தெரியவந்துள்ளது என்ன்வென்றால் வாரம் அரைகப் அளவு வால் நட் உண்டவர்களின் உறுப்புகள் இளமையாகவும், எந்தவித பழுதும் ஏற்படாமல் இருக்கிறது என ஆய்வு கூறுகின்றது. நட்ஸ் வகைகளில் வால் நட் மிகச் சிறந்த பண்புகளை கொண்டு தனித்துவம் வாய்ந்தது. அதில், உடலுக்கு அதிக நன்மையை தரும் நிறைவுறா கொழுப்பு அமிலங்களான ALA மற்றும் ஒமேகா 3 அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் ALA மிகவும் தனித்துவம் வாய்ந்த கொழுப்பு அமிலம். அதை மற்ற நட்ஸ் வகைகளில் இல்லை. வால் நட்டிலிருந்து மட்டுமே பெற முடியும். இவை இதயத்தை பாதுகாக்க அதி முக்கியமானது. அதே போல் அதிக அள்வு பழங்களும், காய்கறிகளும் சாப்பிட வேண்டும். குறைவான இனிப்பு வகை பானங்கள் , குறைந்த சோடியம் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றை கடைப்பிடித்தாலே இளமையாக இருக்கலாம். பழவகைகளில் ஆரஞ்சு, ஆரஞ்சு சாறு, ஆப்பிள், ஆகியவை இளமையாக இருக்க வைக்கும் பழங்கள் என ஆராய்ச்சியாளர் ஃப்ரான்ஸைன் கூறுகின்றார். ஆய்வின் முடிவில் தெரிய வந்தது யாதெனில் தனிப்பட்ட ஒருவரின் உணவுப் பழக்கங்களே நிரந்தரமான இளமையை தரும். அறுவை சிகிச்சை மற்றும் ஊசி மூலம் இளமையை தற்காலிகமாக மட்டுமே பெற முடியும் என கூறுகின்றார் ஆய்வாளர்.

வால் நட் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாமா? ஒரு ஆய்வு



முகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு

முகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு


யாருமே பிறக்கும் போது சரும பிரச்சனைகளுடன் பிறப்பதில்லை. சொல்லப்போனால் பழங்காலத்தை விட இக்காலத்தில் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 

இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.

அதில் முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை.

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.

இங்கு அப்படி பழங்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த 3 அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் இரவில் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளின்றி பொலிவோடு காட்சியளிக்கலாம்.

சந்தனம்

அக்காலத்தில் பல அழகு பிரச்சனைகளுக்கு சந்தனம் பயன்படுத்தப்பட்டு வந்தது. சந்தனத்தில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும்.

ஆகவே சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

துளசி

துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். 

முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.





தினமும் இரவில் படுக்கும் முன் இவற்றை செய்தால் சீக்கிரம் வெள்ளையாகலாம்!


கைவிரல் மூட்டுக்கள் கருப்பாக இருப்பதற்கு, அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கம், நிறமிகளின் தேக்கம் போன்றவை காரணங்களாகும்.

கைவிரல் மூட்டுக்கள் கருப்பாக இருப்பதற்கு, அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கம், நிறமிகளின் தேக்கம் போன்றவை காரணங்களாகும்.

சில இயற்கை வழிகளைப் பின்பற்றி உங்கள் கைவிரல் மூட்டுக்கள் உள்ள கருமையை போக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிகளைப் பின்பற்றினால், உங்கள் கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமைகளை விரைவில் போக்கலாம்.

2 டீஸ்பூன் தேனில், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கைவிரல் மூட்டுக்களில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமை வேகமாக மறைய ஆரம்பிக்கும்.

1/2 டீஸ்பூன் ஜொஜோபா ஆயில், 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1/2 டீஸ்பூன் ரோஸ்மேரி ஆயில் மற்றும் 3 துளி எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கை விரல் நகங்கள் மற்றும் கைவிரல் மூட்டுக்களில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

இப்படி தினமும் இக்கலவையைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும். இதை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

கைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க எளிய வழிகள்


நம் உடலின் சில பகுதிகள் மட்டும் கருமையாக இருக்கும். அப்படி கருமையாகும் பகுதிகளில் ஒன்று தான் கழுத்து. இந்த கழுத்தைச் சுற்றி கருப்பு நிற படலம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

அதில் நீண்ட நேரம் அவ்விடத்தில் சூரியக்கதிர்கள் பட்டால், மோசமான சுகாதாரம், நீரிழிவு போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் இப்படி கழுத்தில் உள்ள கருமையை எளிமையான மூன்று செயல்களின் மூலம் உடனே போக்கலாம். குறிப்பாக இந்த மூன்று செயல்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் 20 நிமிடங்கள் தான்.

இந்த 20 நிமிடங்களிலேயே கழுத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். இப்போது அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போம்...

செயல் #1

கழுத்தில் உள்ள கருமையைப் போக்க முதலில் செய்ய வேண்டியது, சுடுநீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து, அதனை கழுத்தில் 2-3 நிமிடம் வைக்கவும். இப்படி செய்வதால் கழுத்தில் உள்ள சருமத்துளைகள் திறக்கப்பட்டு, அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

செயல் #2 அடுத்ததாக ஸ்கரப் செய்ய வேண்டும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் உப்புடன், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா அல்லது பேக்கிங் உப்பு சேர்த்து, பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த கலவையை கழுத்தில் தடவி, பஞ்சு கொண்டு 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் பேக்கிங் சோடா மற்றும் உப்பு கழுத்தில் உள்ள கருமையைப் போக்கும் மற்றும் ஆலிவ் ஆயில் நல்ல மாய்ஸ்சுரைசராக செயல்படும்.

செயல் #3

மூன்றாவதாக கருமையைப் போக்கும் மாஸ்க் போட வேண்டும். அதற்கு சந்தனப் பொடியுடன், பாதி எலுமிச்சையைப் பிழிந்து, பின் பால் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். 

இந்த மூன்று செயல்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கழுத்தில் உள்ள கருமை மறைந்திருப்பதை நன்கு காணலாம்.







20 நிமிடங்களில் கழுத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி?


ஹேர் கலரிங் செய்வதால் என்ன பயன் என்றால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கூட்டமாக செல்லும் போது தங்களை வேறுபடுத்திக் காட்ட பல முயற்சிகளை பெண்கள் மேற்கொள்கிறார்கள். அதில் ஒன்றுதான் ஹேர் கலரிங். ஆரம்பக் காலத்தில் ‘டை‘ என்ற பெயரில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெட்கப்பட்டு தலையில் பூசிக்கொண்ட ஒரு சமாச்சாரம் தான் இது.

அன்று அடர்த்தியான கருமை மட்டுமே நிறமாக இருந்தது. இன்று, விதவிதமான வண்ணங்களில் கிடைக்கிறது. டையின் நவீன பெயர்தான் ஹேர் கலரிங் என்பது. விருப்பப்பட்ட வண்ணத்தை தலையில் பூசிக்கொண்டு ஆனந்தப் பட்டுக்கொள்ளலாம்.

இதற்காக நூற்றுக்கணக்கான வண்ணங்கள் கிடைக்கின்றன. ஆனாலும், இந்தியர்கள் ஐந்தாறு வண்ணங்களை பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். மற்ற வண்ணங்கள் எல்லாம் வெளிநாட்டினருக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்கள்.

இந்த கலரிங்கை 15 வயது முதல் 60 வயது வரை செய்து கொள்கிறார்கள். ஒவ்வொருவரின் முடியின் தன்மையைப் பொறுத்து அதன் செயல்படும் நேரம் மாறும்.

வெளிநாட்டினருக்கு முடி மென்மையாக மெலிதாக இருப்பதால் கலரிங் செய்வதற்கு 10 நிமிட நேரம் போதுமானது. இந்தியர்கள் முடி சற்று முரட்டுத்தனம் கொண்டதால் 20 நிமிடம் தேவைப்படுகிறது. மிகவும் தடிமனான முடி கொண்ட நீக்ரோக்களுக்கு 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

இன்னமும் கூட 80 சதவீதம் பேர் நரைமுடியை மறைப்பதற்குத்தான் கலரிங் செய்கிறார்கள். மீதமுள்ள 20 சதவீதம் பேரே தங்கள் முடி வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று கலரிங் செய்து கொள்கிறார்கள்.

இப்படி ஹேர் கலரிங் செய்வதால் என்ன பயன் என்றால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வயதானவர்களுக்கு வேண்டுமானால் நரை முடியை மறைக்க பயன்படலாம். அந்த தோற்றம் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கலாம்.

மற்றபடி சரியான முறையில் கலரிங் செய்யாவிட்டால் முடி உதிரும், சிலருக்கு முகமும் கருப்பாகும். இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டே ஹேர் கலரிங் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.

பெண்களை அதிகம் கவரும் ஹேர் கலரிங்


அழகிற்கும் விட்டமின்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. எவ்வாறு கார்போஹைட்ரேட், புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு தேவையோ, அவ்வாறு உடல் மெருகூட்டவும். செல்களின் போஷாக்கிற்கும் விட்டமின்கள் தேவை.

விட்டமின்கள் எடுத்துக் கொள்ளும்போது அழகு மெருகேருகின்றன என்பது உண்மை. இரண்டு விதமான விட்டமின்கள் உள்ளன. கொழுப்பில் கரையும் விட்டமின்கள், நீரில் கரையும் விட்டமின்கள்.

கொழுப்பில் கரையும் விட்டமின்கள் உடலில் சேமித்துவைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது அவை உபயோகப்படுத்தப்படுகிறது. கொழுப்பில் கரையும் விட்டமின்கள் ஏ,டி ஈ, கே ஆகியவை இளமையாகவும் சுருக்கங்களை தடுக்கவும் உபயோகப்படுத்தப்படுகின்றன. கண்களில் ஏற்படும் கருவளையத்தை போக்கிவிடும்.

நீரில் கரையும் விட்டமின்கள் பி காம்பளக்ஸ் மற்றும் சி ஆகியவை உடலில் சேமிக்க வைக்கமுடியாது. அதிகப்படியான சத்து வெளியேறிவிடும். இந்த வகை விட்டமின்கள் எவ்வாறு அழகை ஏற்படுத்துகிறது என பார்க்கலாம்.

விட்டமின் பி1 : விட்டமின் பி 1 கொலாஜன் உற்பத்தியை அதிகமாக்கி, சுருக்கங்களை போகுகிறது. சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், , சோயா பீன்ஸ், முந்திரி, ஓட்ஸ் போன்றவற்றில் கிடைக்கிறது.

விட்டமின் பி2 : ரைபோஃப்ளேவின் அல்லது விட்டமின் பி2, உடலில் புதிய செல்களையும் திசுக்களையும் உற்பத்தி செய்கிறது. இதனால் செல் இறப்பு குறைவாகிறது. செல் இறப்புவிகிதம் குறைந்தால் இளமையாக சருமம் இருக்கும். பால், முட்டை, இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் கிடைக்கின்றன.

நியாசின் என்ற விட்டமின் பி3 : விட்டமின் பி3 வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் முறையாக நச்சுக்கள் மற்றும் கழிவுகள் பிரிக்கப்பட்டு வெளியேறப்படுகின்றன. மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசியில் இந்த வகை வைட்டமின் கிடைக்கிறது.

விட்டமின் பி5 : உடல் பருமனை குறைக்க விட்டமின் பி5 உணவுகளை உண்ணலாம். மேலும் அவை முகத்தில் பருக்கள் வராமல் இருக்க உதவுகிறது. அதிக புரோட்டினை உட்கிரகிக்கச் செய்கிறது. மக்காச்சோளம், முட்டை, சீஸ், தக்காளியில் கிடைக்கிறது.

பைரிடாக்சின் என்ற விட்டமின் பி6 : இவை நிறைய ஆன்டிஆக்ஸிடென்டுகள் கொண்டவை. நார்சத்துக்களும் கொண்டவை. சருமட்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. சருமம் பொலிவாக இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கலாம். முழு தானியங்கள், பயறுகள்,வாழைப்பழம் போன்றவற்றில் இந்த சத்துக்கள் உள்ளன.

பயோடின் என்ற விட்டமின் பி7 : இவை கூந்தல் மற்றும் சரும செல்களை தூண்டும். நகங்கள் மற்றும் கூந்தல் வளர உதவும் விட்டமின் இது. இவை பயறுவகைகள், பழங்கள், காய்கறிகள், முட்டை,சீஸ் போன்றவற்றில் கிடைக்கிறது.

போலிக் அமிலம் என்ற விட்டமின் பி9 : ரத்த சோகையை தடுக்கும். இள நரையை தடுக்கும் விட்டமின் இது. கூந்தல் வலர்ச்சியை தூண்டும். இந்த விட்டமின் பசலைக்கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகம் போன்றவற்றில் உள்ளது.

கோபாலமின் என்ற விட்டமின் பி12 : செல்களை புதுப்பிக்கிறது. இளமையாக இருக்க இந்த விட்டமின் நன்மை செய்கிறது. சருமத்தை மெருகேற்றும். செய்கிறது. முட்டை, கோழி, தயிர், பால் பயறு போன்றவற்றில் கிடைக்கிறது.

விட்டமின் சி : விட்டமின் சி சுருக்கங்களை தடுக்கும். முகப்பரு, கருமை, ஆகியவற்றை நீக்கும். இறந்த செல்களை வெளியேற்றும் . கண்களுக்கு அழகை தரும். இளமையாக இருக்கலாம். சருமத்தில் மினுமினுப்பாக இருக்கும். சிட்ரஸ் பழங்கள், வெள்ளரிக்காய், எலுமிச்சை, ஆகியவைகள் விட்டமின் சி நிறைந்தவை.

அழகை பாதுகாக்கும் விட்டமின்கள் எவையென தெரிய வேண்டுமா?