இளமையாக இருப்பது, இதய மற்றும் சர்க்கரை வியாதி தொடர்பாக எவ்வளவோ ஆராய்ச்சி நடக்கின்றது.
வெளிப்புறமாக எப்படி ஊசி மற்றும் அறுவை சிகைச்சையின் மூலமாக இளமையாக இருக்கலாம் என நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கிறதே தவிர உணவு கட்டுப்பாட்டின் மூலமாகவும், ஆரோக்கியமான உணவுமுறைகளாலும் எப்படி இளமையை காக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளது.
உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கி இளமையாக இருந்தால், வெளிப்புறத்திலும் அவை பிரதிபலிக்கும்.
அவ்வகையில் நல்ல உணவுப்பழக்கங்களாலும், வால் நட் போன்ற பருப்புவகைகளை சாப்பிட்டால் உள்ளுறுப்புகளில் பாதிப்பு இல்லாமல் இளமையை காக்கலாம் என அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம் செய்த புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
30 வருடங்களாக ஆய்வு : கடந்த 30 வருடங்களாக நடந்த ஆய்வில்சுமார் 54, 762 பேர் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அதில் தெரியவந்துள்ளது என்ன்வென்றால் வாரம் அரைகப் அளவு வால் நட் உண்டவர்களின் உறுப்புகள் இளமையாகவும், எந்தவித பழுதும் ஏற்படாமல் இருக்கிறது என ஆய்வு கூறுகின்றது.
நட்ஸ் வகைகளில் வால் நட் மிகச் சிறந்த பண்புகளை கொண்டு தனித்துவம் வாய்ந்தது. அதில், உடலுக்கு அதிக நன்மையை தரும் நிறைவுறா கொழுப்பு அமிலங்களான ALA மற்றும் ஒமேகா 3 அமினோ அமிலங்கள் உள்ளன.
இதில் ALA மிகவும் தனித்துவம் வாய்ந்த கொழுப்பு அமிலம். அதை மற்ற நட்ஸ் வகைகளில் இல்லை. வால் நட்டிலிருந்து மட்டுமே பெற முடியும். இவை இதயத்தை பாதுகாக்க அதி முக்கியமானது.
அதே போல் அதிக அள்வு பழங்களும், காய்கறிகளும் சாப்பிட வேண்டும். குறைவான இனிப்பு வகை பானங்கள் , குறைந்த சோடியம் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றை கடைப்பிடித்தாலே இளமையாக இருக்கலாம்.
பழவகைகளில் ஆரஞ்சு, ஆரஞ்சு சாறு, ஆப்பிள், ஆகியவை இளமையாக இருக்க வைக்கும் பழங்கள் என ஆராய்ச்சியாளர் ஃப்ரான்ஸைன் கூறுகின்றார்.
ஆய்வின் முடிவில் தெரிய வந்தது யாதெனில் தனிப்பட்ட ஒருவரின் உணவுப் பழக்கங்களே நிரந்தரமான இளமையை தரும். அறுவை சிகிச்சை மற்றும் ஊசி மூலம் இளமையை தற்காலிகமாக மட்டுமே பெற முடியும் என கூறுகின்றார் ஆய்வாளர்.
No comments :
Post a Comment