சல்மான் கான் என்னை கெடுத்து விட்டார்: பாலிவுட் நடிகை பரபரப்பு புகார்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன்னை கெடுத்து விட்டதாகவும், அதனால் நான் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் எனவும் பாலிவுட் மாடல் நடிகை பூஜா மிஸ்ரா கூறியுள்ளார்.
ஜெய்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் பூஜா மிஸ்ரா, ஒளிப்பதிவாளர் மூன்று பேர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கெடுத்ததாகவும், அவர்களுடன் சல்மான் கானும் தன்னை கெடுத்ததாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் முதல் தகவல் அறிக்கை நகலை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள நடிகை பூஜா மிஸ்ரா அதில் நடிகர் சல்மான் கான், சத்ருகான் சின்ஹா மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கெடுத்து விட்டனர் என கூறியுள்ளார்.
இதனால் நான் மனச்சிதைவு நோயால் பதிக்கப்பட்டுள்ளேன். மேலும் கடந்த மே மாதம் 17-ஆம் தேதி தன்னுடைய வீட்டிற்கு வந்த சல்மான் கான் தன்னுடைய ஆடைகளை திருடிச் சென்று விட்டார் எனவும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment